தமிழக முதல்வர் பழனிச்சாமியின் கஜா புயல் சேத ஆய்வு பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் இன்று ஆய்வு செய்தார். தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காலையில் சென்று பார்வையிட்டார்.அங்கு உள்ள மக்களிடம் புயல் சேதம் குறித்து கேட்டறிந்தார். அதோடு, மக்களுக்கு நிவாரண நிதியும் வழங்கினார்.
இந்த நிலையில் தற்போது அவர் நாகை, மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் முதல்வர் பழனிச்சாமியின் கஜா புயல் சேத ஆய்வு பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் திரும்பினார் முதல்வர். அவர் சென்ற ஹெலிகாப்டர் சென்னை நோக்கி திருப்பப்பட்டுள்ளது.
undefined
மோசமான வானிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை மற்றும் திருவாரூர் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.டெல்டாவில் மீண்டும் பலத்த மழை.. நிவாரண பணிகள் தடைபட்டது.. மக்கள் கலக்கம்!
மோசமான வானிலை நிலவுகிறது, அதனால் மழையில் ஹெலிகாப்டரில் செல்ல முடியாது என்று பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் பயணம் ரத்தானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.