கஜாபுயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட நடிகர் ரஜினிகாந்த் விரிவான திட்டங்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் கட்சி துவங்க உள்ளதாக நடிகர் ரஜினி கடந்த ஆண்டு அறிவித்ததை தொடர்ந்து முக்கிய பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து தூத்துக்குடிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினி ஆறுதல் கூறினார். மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், காயம் அடைந்தவர்களுக்கும் ரஜினி சார்பில் நிதி உதவியும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கஜாபுயல் பாதிக்கப்பட்ட இடங்களில் ரஜினி மக்கள் மன்றத்தினர் செய்து வரும் நிவாரண உதவிகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளனர். நிவாரண உதவிகளுடன் வரும் அ.தி.மு.க வினை பாதிக்கப்பட்ட மக்கள் விரட்டி அடிக்கின்றனர். அதே சமயம் ரஜினி மக்கள் மன்றத்தினர் வரும் போது அவர்களுக்காக சாலையை சுத்தம் செய்து வரவேற்கின்றனர்.
undefined
புயல் பாதிப்பு முழுமையாக தெரியவருவதற்குள் நாகை, வேதாரண்யம், மன்னார்குடி, திருத்துறைபூண்டி போன்ற பகுதிகளில் ரஜினி ரசிகர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினர். தற்போது அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருடகளையும் வழங்கி வருகின்றனர். இதனால் ரஜினி ரசிகர் மன்றத்தினல் செல்லும் இடங்களில் எல்லாம் வரவேற்பு உள்ளது.
இதற்கிடையே தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மட்டும் இன்றி அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர்களும் புயல் பாதிப்புகளுக்கு நிவாரண உதவு வழங்குமாறு மக்கள் மன்றத்தின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதிலும் இருந்து ரஜினி ரசிகர்கள் புயல் பாதிப்பு பகுதிகளை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினியும் விரைவில் புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட உள்ளார். மு.க.ஸ்டாலின் ஒரே நாளில் புயல் பாதிப்புகளை பார்த்துவிட்டு வீடு திரும்பிவிட்டார். ஆனால் ரஜினியோ மாவட்டத்திற்கு ஒரு நாள் என்று நான்கு நாட்கள் புயல் பாதிப்பு பகுதிகளில் முகாம் இட திட்டமிட்டுள்ளார். அனைத்தும் சாதகமாக இருக்குமாயின் இந்த வாரத்திலேயே ரஜினி டெல்டா மாவட்டத்திற்க புறப்படுவார் என்கிறார்கள்.