தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தின்போது பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளார். இந்த ஒப்பந்தங்கள் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு முதலீடுகள்
2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் மொத்த பொருளாதார மதிப்பை 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த வகையில் பல்வேறு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிந நாட்டிற்கு பநடம் மேற்கொண்டு பல ஆயிரம் கோடி முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்த்தார். இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக முதலைச்சர் ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இன்று அமெரிக்காவிற்கு பறக்கும் ஸ்டாலின்.! பயண திட்டம் என்ன தெரியுமா.? யாரையெல்லாம் சந்திக்கிறார்.?
புரிந்துணர்வு ஒப்பந்தம்
நேற்று அமெரிக்கா சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது Yield Engineering Systems என்ற நிறுவனம் தமிழகத்தில் தொழில் தொடங்க 150 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 300 வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளது. PayPal நிறுவனத்துடன் 1,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குவியும் முதலீடுகள்
250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் Microchip நிறுவனத்துடன் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலாம் 1500 வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஓமியம் நிறுவனத்துடன் 400 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. GeakMinds நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நோக்கியா நிறுவனத்துடன் 450 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.