இன்று அமெரிக்காவிற்கு பறக்கும் ஸ்டாலின்.! பயண திட்டம் என்ன தெரியுமா.? யாரையெல்லாம் சந்திக்கிறார்.?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு, உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த இலக்கை அடைவதற்காக, பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து, முதலீடுகளை ஈர்த்து வருகிறார். தற்போது அவர் மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பயணத்தின்போது, பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் முதலீடு- தமிழக அரசு ஆர்வம்
தமிழகத்தின் மொத்த பொருளாதார மதிப்பை 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.இதன் அடிப்படையில் பல்வேறு தொழில் துறையில் பல்வேறு முதலீடுகளை ஈர்த்துள்ளார். அந்த வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதல் வெளிநாடு பயணம் வரை பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் 2022ஆம் ஆண்டு துபாய் பயணம் மேற்கொண்டார். 5 நாட்கள் பயணத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.6,100 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
முதலமைச்சரின் வெளிநாடு பயணங்கள்
இதனையடுத்து 2023 - மே மாதம் - சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் பயணம் மேற்கொண்டார். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.1,342 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனையடுத்து இந்தாண்டு ஜனவரி மாதம் ஸ்பெயின் நாட்டிற்கு 8 நாட்கள் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது 3,440 கோடி ரூபாய் முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, ஹபக் லாய்டு நிறுவனம் ரூ.2,500 கோடி, எடிபான் நிறுவனம் ரூ.540 கோடி, ரோக்கா நிறுவனம் ரூ.400கோடி முதலீடு செய்ய உறுதி அளித்தன.
அமெரிக்க பயண திட்டம் என்ன.?
இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார். இந்த பயணத்தின்போது உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பல புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை முதலமைச்சசர் சந்தித்து பேசுகிறார்.
'பல்லு போன நடிகர்' துரைமுருகனின் விமர்சனத்திற்கு ரஜினி என்ன பதில் சொன்னார் தெரியுமா.?
யாரெல்லாம் சந்திக்கிறார்.?
இதில் முக்கிய அம்சமாக ஆகஸ்ட் 29ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் இன்வெஸ்டர் கான்கிளேவ் (investors conclave) முதலீட்டாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். ஆகஸ்ட் 31ம் தேதி புலம் பெயர் தமிழர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார். இந்த நிகழ்வுகளை தொடர்ந்து செப்டம்பர் 2ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிக்காகோ செல்லும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார்.
17 நாட்கள் பயணம்
குறிப்பாக, இதில், சர்வதேச அளவில் உள்ள ஃபார்ச்சூன் 500 நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசுகிறார். செப்டம்பர் 7ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் வெளிநாடு வாழ் தமிழர்களுடனான நிகழ்ச்சியிலும் முதல்வர் கலந்து கொள்ள உள்ளார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்து விட்டு செப்டம்பர் 12ம் தேதி சென்னை திரும்புகிறார்.