வந்தாரை வாழவைக்கும் திருப்பூர்.!ஒரே ஆண்டில் 4 முறை வந்துவிட்டேன்.. மீண்டும் வருவேன் ஏன் தெரியும்-மு.க.ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Aug 25, 2022, 1:10 PM IST

தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமல்லாமல், தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது. நேற்றைய தொழிலாளி - இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி, நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருத்தமான சொற்களாக அமைந்திருக்கிறது! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 


திருப்பூர் தனி மாவட்டம் ஆனது எப்படி..?

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் "தோள் கொடுப்போம் தொழில்களுக்கு" திருப்பூர் மண்டல மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து  தொழில் முனைவோருக்கு நலத்திட்ட உதவிகளைகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், விடுதலைப் போராட்ட காலத்திலும் திராவிட இயக்க வரலாற்றிலும் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த திருப்பூர் நகரத்தில் இந்தச் சிறப்பான நிகழ்ச்சி குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி திருப்பூருக்கு பல சிறப்புக்கள் உண்டு. அப்படிப்பட்ட சிறப்புக்குரிய இந்தத் திருப்பூருக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலே தான் திருப்பூர் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. அந்த மாநாகராட்சியை உருவாக்கித் தருவதற்காக சட்டமன்றத்தில் அறிவித்தது மட்டுமல்லாமல், இதே திருப்பூருக்கு நேரடியாக முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வருகை தந்து அந்த மாநகராட்சியை அவர்தான் தொடங்கி வைத்தார்.

Tap to resize

Latest Videos

நானும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன். காரணம், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நேரம். அந்த நிகழ்ச்சியிலே நான் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மக்கள். அரசியல்வாதிகள், பெரியோர்கள், தொழிலதிபர்கள் ஒரு கோரிக்கையை அழுத்தந்திருத்தமாக எடுத்து வைத்தார்கள். இதை தனி மாவட்டமாக உருவாக்கித் தர வேண்டும் என்று அதே மேடையில் திருப்பூர் மாநகராட்சியின் தொடக்கவிழா மேடையிலேயே இந்த மாவட்டம், திருப்பூர் மாவட்டமாக தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்ற அந்த அறிவிப்பையும் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் தான் அறிவித்தார்கள் என்பது வரலாறு.

சொந்த கட்சியில் அதிகார மோதல்...! கையாலாகாத தனத்தை திசை திருப்ப திமுக மீது குற்றச்சாட்டு- மு.க.ஸ்டாலின் ஆவேசம்

ஒரே ஆண்டில் 4 வது முறையாக திருப்பூர்

 அப்படிப்பட்ட இந்த திருப்பூர், பல சிறப்புக்களை பெற்றிருக்கக்கூடிய மாவட்டமாக இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்று குறிப்பாக இந்த மாவட்டத்திற்கு இந்த ஒன்றேகால் ஆண்டு காலத்திற்குள்ளாக நான் நான்காவது முறை வந்திருக்கிறேன். இன்னும் வருவேன், வந்துகொண்டே இருப்பேன், அதில் எந்த சந்தேகமும் கிடையாது. வந்தாரை வாழ வைக்கக்கூடிய திருநகராக இந்த திருப்பூர் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் என்ன என்பது உங்களுக்குத் தெரியும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் முக்கியம் என்பார்கள். அதில் முக்கியமாக, உடுக்க உடை என்றால், அதில் திருப்பூர் இல்லாமல் இருக்க முடியாது. இந்தியாவின் பின்னலாடையின் தலைநகரமாக இருப்பது இந்த திருப்பூர். திருப்பூர் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது பின்னவாடைதான் அந்தளவுக்கு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநில மக்களுக்கும் திருப்பூருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமல்லாமல், தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது. நேற்றைய தொழிலாளி - இன்றைய முதலாளி இன்றைய தொழிலாளி, நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருத்தமான சொற்களாக அமைந்திருக்கிறது!

ஏலே இமய மலை எங்க ஊரு சாமி மலை எட்டு திசை நடுங்க எட்டு வச்சு வாராரு... கேப்டன் வாராறு...

திருப்பூரை நம்பி லட்சக்கணக்கான குடும்பம் வாழ்கிறது

திருப்பூரில் இப்போது தொழிலதிபர்களாக உள்ள பெரும்பாலானோர் தொழிலாளர்களாக இருந்து தொழிலதிபர்களாக முன்னேறி வந்திருக்கக்கூடியவர்கள். அதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்காக நான் பெருமைப்படுகிறேன். திருப்பூரின் மொத்த பின்னலாடை உற்பத்தி ஏறத்தாழ 60,000 கோடி ரூபாய் இதில் 50 விழுக்காட்டிற்கு மேல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 57,900 MSME நிறுவனங்கள் இயங்குகின்றன. இதில் எட்டு லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள். குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளரும் போது சிறு தொழில் முனைவோர் உருவாகிறார்கள். அதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. இலட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வு செழிக்கத் தொடங்குகிறது.

பெருந்தொழில்களை மட்டும் நம்பி இருக்காமல் குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் ஊக்கமடைய வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது. அதிக வேலை வாய்ப்பை உருவாக்குவதில் வேளாண்மை துறைக்கு அடுத்தபடியாக தொழில் நிறுவனங்கள் துறை முக்கிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்காற்றுகிறது. அதனால் தான் இதில் நாம் தனிக்கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். "தோள் கொடுப்போம் நொழில்களுக்கு" என்ற முழக்கத்தோடு MSME நிறுவனங்களின் முக்கிய தேவைகளுக்கு உதவிகள் செய்து வருகிறோம். இத்தகைய தொழில்கள் சென்னையை அல்லது குறிப்பிட்ட மாநகரத்தை மையப்படுத்தி மட்டுமே அமைந்துவிடக்கூடாது என்பதில் இருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி பட தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

நெருக்கடி கொடுத்து அதிமுகவினரை அபகரிக்கும் திமுக.! ஸ்டாலின் செயல் சர்வாதிகார போக்கின் உச்சம்- ஆர்.பி.உதயகுமார்

 

click me!