மாணவி ஸ்ரீமதியின் முதல் மற்றும் 2வது பிரேத பரிசோதனை முடிவுகள் நிறைய வேறுபாடு உள்ளதாக வழக்கறிஞர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
மாணவி ஸ்ரீமதியின் முதல் மற்றும் 2வது பிரேத பரிசோதனை முடிவுகள் நிறைய வேறுபாடு உள்ளதாக வழக்கறிஞர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாகத்தினர், மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், பெற்றோர் தரப்பில் மகள் கொலை செய்யப்பட்டததாகவும் கூறினர்.
undefined
இதையும் படிங்க;- ஸ்ரீமதி உயிரிழப்புக்கு இது தான் காரணம்.. உயிரிழந்த மாணவியின் தோழிகள் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்.!
தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றேர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்துது, உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் கடந்த மாதம் 14-ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றம் உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணர், அரசு மருத்துவர்கள் 3 பேர் கொண்ட குழு முன்னிலையில் மாணவியின் உடல் கடந்த மாதம் 19-ம் தேதியன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது அடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவின்படி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவினர், மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து நேற்று முன்தினம் சீலிடப்பட்ட கவரில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் சமர்ப்பித்தனர். இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி தரப்பு வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில்;- மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை இரண்டு அறிக்கைகளையும் மருத்துவர்களிடம் காண்பித்தோம். இதில் முதல் மற்றும் 2 வது பரிசோதனைகளில் சில வேறுபாடுகள் இருப்பது தெரியவந்தது. முதல் பிரேத பரிசோதனையை விட 2 வது பரிசோதனையில் உடலில் காயங்கள் அதிகமாக இருப்பது தெரிய வந்தது.
இதையும் படிங்க;- மகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் இதுதான் ஒரே வழி.. ஸ்ரீமதியின் தாய் எடுத்த அதிரடி முடிவு..!
அதுபோல மாணவி பல வந்த படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் இதில் சந்தேகம் வழுவாக உள்ளது. முதல் பிரேத பரிசோதனை அனுபவம் இல்லாத மருத்துவர்களை வைத்து அவசர கதியில் செய்யப்பட்டுள்ளது. 2வது பிரேத பரிசோதனை சிறப்பு மருத்துவர்களை வைத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.