தொடரும் பாலியல் குற்றச்சாட்டு ! பேராசிரியர்கள் மாணவர்களை வீட்டுக்கு வரச்சொல்லக்கூடாது ! மெட்ராஸ் யுனிவர்சிட்டி அதிரடி!!

By Selvanayagam PFirst Published Aug 31, 2019, 10:11 AM IST
Highlights

மாணவ, மாணவிகளை தங்கள் வீடுகளுக்கு எந்த காரணங்களுக்காகவும் பேராசிரியர்கள் அழைக்கக் கூடாது என சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழகம்  சுற்றறிக்கை ஒன்றை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள்  தங்கள் வீடுகளுக்கு அழைத்தால் மாணவ,மாணவியர்கள் அங்கு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியொரு நிலை ஏற்பட்டால் மாணவர்கள் நிர்வாகத்திடம் உரிய அனுமதி கோர வேண்டும். பேராசிரியர்கள் அழைப்பு விடுக்கக் கூடாது. 
இதே போல் பிராஜெக்ட்  தொடாபாக வெளியூர்களுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ போராசிரியர்கள் மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பாலியல் தொந்தரவற்ற வளாகமாக மாற்றும் முயற்சி இது என்றும் , பாலியல் தொந்தரவு இருந்தால் பல்கலைக்கழக பேராசிரியை ரீட்டா ஜான் தலைமையிலான குழுவிடம் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளளது. 

மாணவர்கள் தரப்பிலோ, பேராசிரியர்கள் தரப்பிலோ தவறு இழைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

click me!