Murder: மகனை மரத்தில் கட்டிவைத்து அடித்தே கொன்ற தந்தை; மனைவியின் பேச்சை கேட்டு நடந்ததால் ஆத்திரம்

By Velmurugan s  |  First Published Apr 25, 2024, 12:30 PM IST

கரூர் அருகே குடும்ப தகராறில் மகனை அடித்தே கொலை செய்துவிட்டு விபத்து போல் நாடகமாடிய தந்தையை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கரூர் மாவட்டம், ஜெகதாபியை சேர்ந்தவர் மாரியப்பன் என்கிற மனோகரன் (வயது 43) ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி சுதா(40) என்ற மனைவியும், 17 வயதில் 1 மகளும், 13 வயதில் 1 மகனும் உள்ளனர். இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில் மனோகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மது போதையில் இருந்து விடுபடுவதற்காக சேலத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர். அந்த சமயத்தில் மனோகரன் வீட்டிற்கு நேர் எதிரே அவருடைய தந்தை மாணிக்கம் (71) புதியதாக வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். இதனை மனோகரனின் மனைவி சுதா எங்கள் வீட்டிற்கு நேர் எதிராக ஏன் வீடு கட்டுகிறீர்கள், எனது கணவர் வந்த பின்பு வீடு கட்டும் பணியை தொடங்குங்கள் என்று கூறியுள்ளார். 

Latest Videos

undefined

என் கர்ப்பத்திற்கு அந்த போலீஸ் தான் காரணம்; திருமணத்தை மீறிய உறவை சுட்டிகாட்டி காவல் நிலையம் முன் பெண் தர்ணா

இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம் மது போதையில் வந்து மருமகள் சுதாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதை சிகிச்சை முடித்து வீட்டிற்கு வந்த தனது கணவர் மனோகரனிடம் சுதா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோகரன் இது குறித்து தனது தந்தை மாணிக்கத்திடம் சண்டை போட்டுள்ளார். ஆத்திரமடைந்த மாணிக்கம் தனது மகள் வழி பேரன் மணிராஜை வரவழைத்து, மனோகரனை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து குச்சியால் பலமாக தாக்கியுள்ளனர். இதில் மனோகரன் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. 

நெல்லையில் தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறிப்பு

இதை மனோகரனின் மனைவி சுதாவிடம் கூறி இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என கூறி மிரட்டி, நெருங்கிய உறவினர்கள் சிலரை மட்டும் வரவழைத்து சாலை விபத்தில் மனோகரன் இறந்து கிடந்ததாக கூறி, உறவினர்களுடன் சேர்ந்து மனோகரன் உடலை சுடுகாட்டுக்கு தூக்கி சென்று எரித்து விட்டனர். இதுகுறித்து மனோகரனின் மனைவி சுதா அளித்த புகாரின் பேரில், வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணிக்கம் மற்றும் மணிராஜை கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதிமன்ற காவலுக்கு திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

click me!