
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லக்கூடிய புறநகர் மின்சார ரயில் சேவையானது நாளை மறுநாள் மார்ச் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படாது என்று தென்னக ரயில்வே இன்று மார்ச் 1ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தாம்பரம் மற்றும் கடற்கரை இடையிலான ரயில் தடங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் இந்த சேவை நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக கடந்த நான்கு வாரங்களாக ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் துண்டிக்கப்படுவதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
கடந்த வாரமும் தென்னக ரயில்வே சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையிலான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தை நிறுத்திய நிலையில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 150க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, ஆனால் இந்த வாரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாகவே குறைவாகவே இயக்கப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து நான்காவது வாரமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவது மக்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா; அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்