அசுர வேகத்தில் மோதி தள்ளிய சொகுசு கார்; நெல்லையில் சாலையை கடக்க முயன்ற மூவர் பலி

By Velmurugan s  |  First Published Mar 1, 2024, 7:10 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த ஸ்ரீரங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் மகேஸ் (வயது 27), இவரது நண்பர் மூலைக்கரைப்பட்டி அடுத்த அவினா பேரியைச் சேர்ந்தவர் மாலை ராஜா (25), இவரது தம்பி சண்முக வேல் (17). இவர்கள் மூவரும் நாங்குநேரி அடுத்த நெடுங்குளத்தில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

போக்கு துறையில் ஏற்பட்ட நட்டத்திற்கு ஊழியர்களே காரணம்; அரசு விழாவில் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் நேற்று இரவு நாங்குநேரி பகுதியில் உணவு சாப்பிட்டுவிட்டு மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் நெடுங்குளம் நோக்கி சென்றுள்ளனர். நாங்குநேரி அடுத்த தாளை குளத்தில் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்ற போது நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சொகுசு கார் இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது அசுர வேகத்தில் மோதியது.

இந்த விபத்தில் மகேஷ் மற்றும மாலை ராஜா என இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த சண்முக வேல் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பாக மூன்றடைப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!