மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதிய முத்துமாரியம்மன்; நெல்லையில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Feb 27, 2024, 8:00 PM IST

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு முத்து மாரியம்மன் எழுதியது போன்ற ஒரு கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


திருநெல்வேலியில் முத்துமாரியம்மன் எழுதியதாக பரவி வரும் கடிதத்தில், “பூலோகத்திலேயே வசிக்கக் கூடிய பூலோக வாசிகளே, பக்த கோடி பெருமக்களே, நான் தான் உங்கள் முத்து மாரியன் பேசுகிறேன். பொதுவாக பக்தர்களின் உடலில் வந்து குறி சொல்லும் நான் தற்போது காகிதத்தில் எழுத்து வடிவில் உங்களிடம் கூற வந்திருக்கிறேன். என்னை பற்றி முழுவதுமாக அறியாத பக்தர்கள்/பூலோக வாசிகளுக்கு என்னை பற்றி கூறவும், எனது பக்தர்கள் என்ன நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றியும் கூறவும் வந்திருக்கிறேன்.

நான் தான் உங்களது அம்மன், மாரியம்மன். மாரி என்றால் என்ன என்பது பற்றி தெரியுமா? மாரி என்றால் மழை. நீர் உருவாகுவது மழையால் தான். மாரியாய் பொழிந்து பக்தர்களின் தேவைக்காக கடல், ஆறு, குளம், குட்டை, கால்வாய், கிணறு, ஊற்று என பல வடிவிலயே உருமாறி உங்கள் தேவைகளுக்காக அருள் பாலித்து வருகிறேன்.

Latest Videos

undefined

வருமான வரித்துறை மூலம் தொழில் அதிபர்களிடம் கல்லா கட்டும் பாஜக - ஆனந்த் சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு

ஆனால் மக்களோ எனது பெயரை பயன்படுத்தி எனது உருவை பயன்படுத்தி குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை ஆக்கிரமிக்கின்றனர். அப்படி ஆக்கிரமிக்கப்பட்ட இடம் தான் வி.எம்.சத்திரம் பீர்க்கன் குளத்தில் எனது பெயரில் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில் எனக்கு குளத்தில் இருக்கும் நீராக தண்ணீராக அதுவும் நல்ல தண்ணீராக இருக்கத் தான் விருப்பம். எனக்கு கோவில் தேவையில்லை. கட்டிடங்கள் தேவை இல்லை. எனது உண்மையான பக்தர்கள் பணி என்பது அந்த குளத்தை பாதுகாப்பது தான். குப்பைகள், கழிவுகள் அல்லாத தூய்மை பணியான குளத்தை பாதுகாப்பது தான்.

எனவே எனது பெயரில் வி.எம்.சத்திரத்தில் வர்டு எண் 38ல் உள்ள பீர்க்கன் குளத்தில் உள்ள மாரியம்மன் கோவில் ஆனது ஆக்கிரமித்துகட்டப்பட்டுள்ளது. எனது பெயரிலான அந்த ஆக்கிரமிப்பு கோவிலை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும். எனது கோவில் மட்டுமல்லாது அந்த குளத்தில் உள்ள அனைத்து ஆக்கிரிமிப்புகளையும் உடனடியாக அகற்றுமாறு அம்மனாகி நான் ஆணையருக்கு உத்தரவிடுகிறேன்.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றுவதை தடுப்பவர்கள் எனது உண்மையான பக்தர்கள் இல்லை. அவ்வாறு இந்த ஆக்கிரமிப்பை தடுப்பவர்களுக்கு கடும் தண்டனை அளிப்பேன். ஏற்கனவே வழிக்காடும் மன்றத்தில் இந்த குளம் தொடர்பான ஆக்கிரமிப்பு வழக்கு வந்த போது ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கட்டளையிட்டேன். அதன்படியே அந்த ஆக்கிரமிப்புகளை கற்றுமாறு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பி இருந்தேன். அதற்கு என்னை ஆக்கிரமித்தவர்கள் புத்தி வரவில்லை.

சுத்தம் சோறு மட்டுமல்ல பிரியாணியும் போடும்; தஞ்சையில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து

எனவே தற்போது ஆணையர் மூலமாக பீர்க்கன் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிடுகிறேன். ஆக்கிரமிப்புகளை ஆடி மாத்திற்குள் அகற்றாவிட்டால் அந்த குளத்தை ஆக்கிரமித்த மக்கள் எனது கோபத்திற்கு ஆளாவார்கள். எனது பெயரை சொல்லி நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் எனது கடும் கோபத்திற்கு ஆளாவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனது உண்மையான பக்தர்கள் நீர்நிலைகளை உள்ளிட்ட குளத்தை பாதுகாக்க வேண்டும். நான் சிலையில் இல்லை. நீர்நிலைகளில் உள்ள தண்ணீரில் அருள் பாலிக்கிறேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!