மாஞ்சோலை சூழல் சுற்றுலா போக ரெடியா? இந்த நிபந்தனைகளுடன் இன்று முதல் அனுமதி..!

By vinoth kumar  |  First Published Feb 16, 2024, 11:04 AM IST

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட மாஞ்சோலை சூழல் சுற்றுலா செல்ல 16.02.2024-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் கீழ்க்கண்ட விபரப்படி அனுமதிக்கப்படுகிறது.


நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்கு சுற்றுலா மேற்கொள்ள பல்வேறு நிபந்தனைகளுடன் இன்று முதல் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. 

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட மாஞ்சோலை சூழல் சுற்றுலா செல்ல 16.02.2024-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் கீழ்க்கண்ட விபரப்படி அனுமதிக்கப்படுகிறது.

Latest Videos

undefined

இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்.! இனி மதிப்பெண் 500 அல்ல 600- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

நிபந்தனைகள் விவரம்:

*  துணை இயக்குநர் / வன உயிரினக் காப்பாளர், புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் அலுவலகத்தையோ அல்லது வனச்சரக அலுவலகத்தையோ அனுமதிக்காக அணுக வேண்டியதில்லை. மணிமுத்தாறு வனச்சோதனை சாவடிக்கு நேரில் சென்று வனக்காப்பாளரிடமே அனுமதி பெற்று உடன் செல்லலாம்.

*   நாள் ஒன்றிற்கு 10 நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இருசக்கர வாகனம், வேன், திறந்த வெளி வாகனம் போன்ற வாகனங்களின் பயணத்திற்கு அனுமதி இல்லை. முன்னுரிமை அடிப்படையில் முதலில் வரும் 10 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். சாலைக்கேற்ப Clearance வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். Ground

*   காலை 8.00 மணி முதல் சென்று மாலை 5.00 மணிக்குள் மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியை கடந்து விட வேண்டும். தவறும் பட்சத்தில் வனவிதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், காக்காச்சி புல் வெளிப்பகுதி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

*  சுற்றுலா பயணிகள் பயணத்தின் போது தடைச்செய்யப்பட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், மதுபானங்கள் மற்றும் பாலீதின் பைகள் போன்றவற்றை எடுத்து செல்ல அனுமதி இல்லை.

*   மணிமுத்தாறு வனச்சோதனை சாவடிக்கு நேரில் சென்று அனுமதி பெறும்பட்சத்தில், செல்லும் வாகனத்தின் பதிவுச்சான்று நகல்,வாகன காப்பீடு நகல், ஆதார் நகல் இவைகளை சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.

*  வாகனத்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை பொருத்தே நபர்கள் அனுமதிக்கப்படும்.

*  மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் அனுமதி பெற்று நுழைவு கட்டணம் செலுத்தி, ரசீது பெற்று பின் செல்ல வேண்டும்.

click me!