இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு; தங்கம் தென்னரசுவின் அதிரடியால் தப்பும் மேயர் சரவணன்?

By Velmurugan s  |  First Published Jan 12, 2024, 10:53 AM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு இறுதி நேரத்தில் பஞ்சாயத்து நடத்தி கவுன்சிலர்களை கட்டுப்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமாக திமுகவிற்கு 44 கவுன்சிலர்களும், அதிமுக 4, காங்கிரஸ் 3, மதிமுக 1, முஸ்லிம் லீக் 1, மமக 1 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் மேயர் சரவணன் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். திமுக கவுன்சிலர்கள் கூட்டம் கூட்டமாக மேலிடத்திற்கு புகார் தெரிவித்து வந்த நிலையில், இதனை சரி செய்வதற்காக மேயர் சரவணனும், தனக்கு தெரிந்த மேலிட பொறுப்பாளர்களை அவ்வபோது நேரில் சந்தித்து தன் மீதான நடவடிக்கையை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார்.

திமுக கட்சி ரீதியாக மேயர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில் அதிருப்தி கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாமன்ற கூட்டத்திலேயே மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதனால் கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு தலையிட்டு அவ்வபோது பிரச்சினைகள் குறித்து கேட்டு வந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

அண்ணாமலை பாதயாத்திரையை முடிக்க பாஜக தலைமை அதிரடி உத்தரவு.? என்ன காரணம் தெரியுமா.?

இதனிடையே சரவணனுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் கவுன்சிலர்கள் அனைவரும் மேயருக்கு எதிராக வாக்களிக்கும் பட்சத்தில் அது கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிருப்தி உறுப்பினர்கள் இதே போன்ற நிலைப்பாட்டை கையில் எடுக்கத் தொடங்கி விடுவார்கள் அது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும் என முக்கிய நிர்வாகிகள் மேலிடத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் சரவணன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கவுன்சிலர்கள் வாக்களிக்காமல் பார்த்துக்கொள்வது மாவட்ட பொறுப்பு அமைச்சரின் பணி என்று தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று மாலை அவசர அவசரமாக சென்னையில் இருந்து விருதுநகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அமைச்சர் தங்கம் தென்னரசு திமுக கவுன்சிலர்கள் அனைவரையும் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்து.! கோயம்பேடு, கிளாம்பாக்கத்திற்கு செல்ல சிறப்பு ஏற்பாடு-போக்குவரத்து கழகம்

அதன்படி திமுக கவுன்சிலர்கள் அனைவரும் தங்கம் தென்னரசுவீட்டில் குவிந்தனர். மேயர்கள் மத்தியில் உருக்கமாக பேசிய அமைச்சர், நமது கட்சி தலைவர் ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளை கையாண்டு வருகிறார். இதில் அவருக்கு நாம் கூடுதல் தலைவலிய உண்டுபடுத்தினால் கட்சிக்கு பெரும் சிக்கலாகிவிடும். மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் மேயருக்கு எதிராக நாம் வாக்களிக்கும் பட்சத்தில் அது கட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

உங்கள் கோரிக்கையின் அடிப்படையில் மேயர் சரவணன் கண்டிப்பாக மாற்றப்படுவார். ஆனால், அதற்கு மாமன்ற கூட்டம் சரியான வழியாக இருக்காது. அது கட்சிக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். மாறாக கட்சி தலைமையே அவர் மீது உரிய நேரத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு மேயர் மாற்றப்படுவார் என உறுதி அளித்தார். அமைச்சரின் பேச்சுக்கு கவுன்சிலர்கள் தலை அசைத்தாலும் மேயருக்கு எதிராக வாக்களிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதை உணர்ந்த தங்கம் தென்னரசு இறுதியில் நாளை யாரும் மாமன்ற கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என அன்பு கட்டளை இட்டுள்ளார்.

அதன்படி கவுன்சிலர்கள் அனைவரும் மதுரையிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

click me!