
Chennai schools: No holiday tomorrow! Important announcement: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதற்காக ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரையில் அனைவரும் தயாராகி வரும் நிலையில் நாளை 22 ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் மாணவர்களிடையே இருந்தது.
10 மாவட்டங்களில் பட்டையை கிளப்பப்போகுதாம் கனமழை! சென்னையிலும் தரமான சம்பவம் இருக்காம்!
இதில், கோடை வெயிலின் தாக்கம் இப்போதே கடுமையாக இருக்கிறது. அப்படியிருக்கும் போது நாளை 22 ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பள்ளி வேலை நாளாக அறிவித்துள்ளது. அதுவும் வெள்ளிக்கிழமை கால அட்டவணைப்படியே பள்ளி இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு லேப்டாப் விலை இவ்வளவா.? சட்டசபையில் வெளியான முக்கிய தகவல்
இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையில் மாவட்டந்தோறும் உள்ள அரசு, அரசு உதவி பெறும், ஆதிதிராவிட, தனியார், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளும் நாளை 22 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவே செயல்படும். மேலும், வெள்ளிக்கிழமைக்கான கால அட்டவணைப்படியே பள்ளி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.