Chennai Port - Maduravoyal corridor: மதுரவாயல் - துறைமுகம் பாலத்துக்கு சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல்

By SG BalanFirst Published Feb 2, 2023, 11:34 AM IST
Highlights

மதுரவாயல் சிவானந்தா சாலையிலிருத்து கோயம்பேடு வரை 20.56 கி.மீ. தொலைவுக்கு இப்பாலம் அமைய உள்ளது. ரூ.5,800 கோடி செலவில் இந்தப் பாலம் கட்டப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரூ.5,800 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மதுரவாயல் – துறைமுகம் இடையேயான ஈரடுக்கு மேம்பாலத்துக்கு மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு நிபந்தனைகளுடன் கூடிய ஒப்புதலை வழங்கியுள்ளது.

சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பல இடங்களில் தூண்களும் நிறுவப்பட்டுள்ளன.

இத்திட்டம் கூவம் ஆற்றின் கரையை ஒட்டி கட்டப்படும் இந்தப் பாலத்துக்கு பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது. கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

BUDGET 2023: ஒன்றுமே இல்லாத பட்ஜெட்! தொழில் வர்த்தக சபை கடும் அதிருப்தி

தற்போதைய திமுக அரசு பதவியேற்றதும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்தானது. தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை இடையே இத்திட்டத்துக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இப்பாலம் ரூ. 5,800 கோடி செலவில் நான்கு பகுதிகளாக கட்டப்பட உள்ளது. மதுரவாயல் சிவானந்தா சாலையிலிருத்து கோயம்பேடு வரை 20.56 கி.மீ. தொலைவுக்கு இந்தப் பாலம் கட்டப்படும்.

இந்தப் பாலத்தில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் சரக்கு வாகனங்களும் செல்லும் வகையில் இந்தப் பாலம் உருவாக உள்ளது. கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட இத்திட்டத்துக்கான மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டு உள்ளது.

கள ஆய்வில் பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்

கடந்த ஆண்டு அக்டோபரில், மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் மதுரவாயல் – சென்னை துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டம் 2024ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று கூறியிருந்தது நினைவூட்டத்தக்கது.

இந்தப் பாலம் அமைந்தால் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48 சதவீதம் வரை அதிகரிக்கும். காத்திருப்பு காலத்தையும் இந்தப் பாலம் 6 மணிநேரம் வரை குறைக்கும்.

9 ஆண்டுகாலமாக ஏமாற்றியது போல் தற்போதும் மக்களை ஏமாற்றும் பாஜக..! மோடி அரசுக்கு எதிராக சீறும் சீமான்

click me!