கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று வேலூரில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்து மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதல்வர்” என்ற புதிய திட்டம் ஒன்றை தொடங்கி வைத்துள்ளார். அதன்படி அரசு சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எவ்வாறு பின்பற்ற படுகிறது, திட்டத்தின் தன்மையில் மாற்றங்கள், பலன்கள் ஏற்பட்டுள்ளனவா என்பதை நேரில் சென்று ஆய்வு செய்யும் வகையில் இத்திட்டம் பின்பற்றப்படுகிறது.
புதுவையில் 64வயது மூதாட்டியுடன் உறவில் ஈடுபட்டு கம்பி எண்ணும் வட மாநில இளைஞர்
undefined
முன்னதாக இத்திட்டத்திற்காக சென்னையில் இருந்து வேலூருக்கு ரயிலில் பயணம் மேற்கொண்ட முதல்வர், நேரத்தை வீணாக்கக் கூடாது என்பதற்காக ரயில் பெட்டியை அலுவலகமாக மாற்றி ரயிலில் செல்லும்போது அதிகாரிகளுடன் துறை ரீதியிலான ஆலோசனைகளை மேற்கொண்டபடி பயணம் செய்தார்.
தென்னிந்திய அழகி போட்டி; 2 குழந்தைகளின் தாயான கோவை பெண் பட்டம் வென்று அசத்தல்
திட்டத்தின் தொடக்கமாக வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறார். அதன்படி வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றிற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும் காலை உணவை சுவைத்து தரத்தை ஆய்வு செய்தார்.
மேலும் அங்கு சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்த பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறி மாணவர்களிடம் கருத்தும் கேட்டறிந்தார்.