தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் மற்றும் நாளை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் சென்னைக்கு தென்கிழக்கே 620 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 530 கிலோ மீட்டர் தொலையில் நிலைக்கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயல் நாளை நள்ளிரவு கடையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
இதையும் படிங்க;- நள்ளிரவில் உருவானது மாண்டஸ் புயல்.! ஊட்டி போல் மாறிய சென்னை..! தரைக்காற்று வீச்சு அதிகரிப்பு
புயல் கரையை கடக்கும் போது 85 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் காரணமாக தற்போது சென்னை மாநகர முழுவதும் தரைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் மற்றும் நாளை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க;- ஆளுநரை சந்தித்த ஆன்லைன் விளையாட்டு நிர்வாகிகள்..! திடீர் ஆலோசனை.? என்ன காரணம் தெரியுமா..?