குழந்தை இல்லாத ஏக்கம்.. கணவர் வெளியூருக்கு சென்ற நேரத்தில் காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை.!

By vinoth kumar  |  First Published Nov 8, 2022, 10:06 AM IST

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் காயத்ரி (32).வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர் செல்வகுமார்(35) என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 


காதல் திருமணம் செய்து கொண்ட சிஎம்சி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் காயத்ரி (32).வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர் செல்வகுமார்(35) என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரும் வேலூர் தொரப்பாடி பெரியஅல்லாபுரத்தில் வசித்து வந்தனர். இந்த மருத்துவ தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால், மனவேதனையில் காயத்ரி இருந்து வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- டிக்டாக் வீடியோ போடாத.! சினிமா துணை நடிகையை கழுத்தை நெறித்து கொன்ற கணவன்.!

இந்நிலையில், செல்வகுமார் சொந்த வேலைக்காரணமாக டெல்லி சென்றிருந்தார். அங்கிருந்து மனைவியை பலமுறை தொடர்பு கொண்ட போது நீண்ட நேரமாகியும் போனை எடுக்கவில்லை. இதனால், பதறியடித்துக்கொண்டு டெல்லியில் இருந்து செல்வகுமார் விமானம் மூலம் வீடு திரும்பினார். இதனையடுத்து, நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது காயத்ரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத கணவர் மனைவி இறந்ததை பார்த்து கதறினார். 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை இல்லாத காரணத்தால் காயத்ரி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;- மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி அறையில் தற்கொலை... அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள்!!

click me!