சினிமா பாணியில் 40 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.!

Published : Sep 26, 2022, 09:53 AM IST
 சினிமா பாணியில்  40 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.!

சுருக்கம்

புதூர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் மீது  அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது  இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சுமார்  40 அடி உயரமுள்ள ரயில்வே  மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

வாணியம்பாடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்  40 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவராஜ்புரம் பகுதியை சேர்ந்த இளைஞர் முனி (22). இவர் கட்டிடத் மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவர் தன் சொந்த வேலையாக வாணியம்பாடிக்கு வந்து பின்னர் மீண்டும் தன் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, புதூர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் மீது  அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது  இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சுமார்  40 அடி உயரமுள்ள ரயில்வே  மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்து வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் முனியில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!