முருகன் பரோல் கேட்டு சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் ரோல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
30 நாள் பரோல் வழங்கக்கோரி வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரத இருந்ததை அடுத்து அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, சிறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது பரோலில் நளினி வெளியே வந்துள்ளார். இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் பரோலில் வெளியே வந்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், முருகன் பரோல் கேட்டு சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் ரோல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்நிலையில், வேலூர் சிறையில் முருகன் 6வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தனக்கு 30 நாள் பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் முருகன் இன்று காலை திடீரென மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு பின்னர் சிறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.