அரபிக்கடலில் இருந்து வரும் தரைக்காற்று… குமரி, நெல்லையில் 2 நாட்களுக்கு கனமழை... வனிலை மையம் எச்சரிகை!!

By Narendran SFirst Published Nov 13, 2021, 2:19 PM IST
Highlights

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.  

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தில் இயல்பான அளவை விட அதிக அளவிளான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி விட்டன. இந்த நிலையில் அன்மையில் வங்கக்கடலில் நிலைக்கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் மாலை சென்னைக்கும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிக்கும் இடையே கரையைக் கடந்து, தற்போது ஒடிசா கடலோரப் பகுதியில் நிலை கொண்டு அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடந்து விட்ட போதிலும் தமிழகத்தின் சில இடங்களில் இன்னும் மழை நீடித்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டடத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கக்கடலில் தெற்கு அந்தமானில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்வதாகவும் வட தமிழக கடலோர பகுதிகள் சீற்றத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இதன் காரணமாக மீனவர்கள் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழக பகுதிகளில் தாக்கம் இருக்காது என்று கூறிய அவர், காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு நோக்கி நகர்ந்தால் தரைக்காற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருக்கும் என்றும் அது புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் தெரிவித்த அவர், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஆந்திராவில் தான் மழை இருக்கும் என்றும் தமிழகத்தில் கனமழை இருக்காது என்றும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கூறிய அவர், அரபிக்கடலில் இருந்து வரும் தரைக்காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கன்னியாகுமரி மற்றும் நெல்லை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் இருக்கும் வளிமண்டல சுழற்சி கர்நாடகா நோக்கி நகர்வதால் கன்னியாகுமரி பகுதிகளில் 2 நாட்களுக்கு பிறகு மழை குறைந்து விடும் என்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்வதால் வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் சராசரி மழையின் அளவு 27 செ.மீ என்கிற நிலையில் 42 செ.மீ கிடைத்துள்ளதாகவும் சென்னையில் சராசரி 47 செ.மீ என்கிற நிலையில் 82 செ.மீ கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழையின் அளவு 78 செ.மீ என்கின்ற அளவை கடந்து விட்டதாகவும் தமிழகத்தில் நவம்பர் மாதத்திற்கான சாரசரி மழை அளவு 10 செ.மீ என்ற நிலையில் 20 செ.மீ மழை கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சென்னையில் நவம்பர் மாதத்திற்கான சாரசரி மழை அளவு 20 செ.மீ என்ற நிலையில் 61 செ.மீ மழை கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இது மிக அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

click me!