Kilambakkam Bus Stand : சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், அதிகாரப்பூர்வமாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று அழைக்கப்படுகின்றது. சென்னையின் தெற்கு புறநகர்ப் பகுதியான கிளம்பாக்கத்தில் உள்ள இந்த புதிய பேருந்து நிலையமானது ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவைகளை வழங்கும் இந்த பேருந்து நிலையம் கடந்த 30 டிசம்பர் 2023 அன்று செயல்பாட்டுக்கு வந்தது.
பல சர்ச்சைகள் இந்த பேருந்து நிலையத்தை சூழ்ந்திருந்தாலும் பல்வேறு தரப்பினரும் இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு அளித்து வருகின்றனர். எதிர்கால தேவைகள் மற்றும் மாற்றங்களை கருத்தில் கொண்டு, அனைத்து வசதிகளுடன் இந்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ளது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
நிறைவு பெற்ற தைப்பூச திருவிழா; பழனியில் உண்டியல் காணிக்கையாக 20 நாட்களில் ரூ.3.4 கோடி வசூல்
தென் மாவட்டங்களை இணைக்கும் ஒரு முக்கிய இடமாக இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையத்தை லுலு மால் நிர்வாகத்திற்கு அளித்துவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில் அவை குறித்த விளக்கத்தை தமிழக அரசு அண்மையில் அளித்தது.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்ததற்காக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா பாராட்டு தெரிவித்துள்ளார். மக்களுக்கு இந்த புதிய பேருந்து நிலையம் திறன்பட செயலாற்றும் என்றும் நீதிபதி மஞ்சுளா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலோர காவல்படை தினம்; சென்னை மெரினாவில் இந்திய கடலோர காவல்படை சாகசம்