தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 12ல் ஆரம்பம்; 19ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு

By SG Balan  |  First Published Feb 1, 2024, 5:35 PM IST

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி கூட இருப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 2024-25 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் பிப்ரவரி 19ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி கூட இருப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 2024-25 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் பிப்ரவரி 19ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை பிப்ரவரி 12ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட்டியுள்ளார்" என்றார்.  ஆளுநர் உரையுடன் இந்தக் கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Latest Videos

undefined

"பிப்ரவரி 19ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வார். பிப்ரவரி 20ஆம் தேதி 2024-25ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கையும், 2023-24ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படும்!” என்றும் அவர் கூறினார்.

பள்ளி மாணவிகளை தனியே அழைத்து பாலியல் வன்கொடுமை! 2 வருடமாக குற்றவாளிக்கு உதவிய 9 வயது சிறுவன்!

தனியாக தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்த கேள்விக்கு பதில் கூறிய அவர், சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என்பதே முதல்வர் திமுக அரசின் நிலைப்பாடு என்று கூறினார்.

மேலும், பழைய சட்டப்பேரவை பதிவுகள் முழுவதையும் ஆன்லைனில் பார்ப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாவும் அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு எடுத்துக்கூறினார்.

ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் பூஜை! வெளியான முதல் வீடியோ... எதிர்க்கும் முஸ்லீம்கள்!

click me!