வேலூரில் நகை வாங்குவது போல் நடித்து 5 சவரன் வளையல் அபேஸ்; போலீஸ் அதிரடி

By Velmurugan s  |  First Published Feb 1, 2024, 1:19 PM IST

வேலூரில் பிரபல நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 5 சவரன் வளையலை திருடிச் சென்ற பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் ஜோஸ் ஆலுக்காஸ்  நகை கடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் நகை வாங்க வந்துள்ளனர். பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த மாடல் அனைத்தையும் பார்த்துவிட்டு அவர்கள் நகை வாங்காமலேயே சென்றதாக தெரிகிறது. பின்பு நகைக்கடை ஊழியர் நகையை எடுத்து வைக்கும் போது 5 சவரன் தங்க வளையல் ஒன்று காணாமல் போனது தெரிய வந்தது.

திருத்தணியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கதற கதற கற்பழிப்பு; தண்ணீர் கேட்பது போல் நடித்து அத்துமீறல்

Tap to resize

Latest Videos

இதனைத் தொடர்ந்து நகை கடை ஊழியர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில், இரண்டு பெண்களும் அந்த நகையை எடுத்துச் செல்வது போல்  சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து நகைக் கடை மேலாளர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வடக்கு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடி காட்சிகளை ஆய்வு செய்து இரண்டு நாட்களுக்குள்  திருடிச் சென்ற இரண்டு பெண்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

கள் இறக்குவதற்கான தடையை நீக்காவிட்டால் வரும் தேர்தலில் நாங்களே போட்டியிடுவோம் - கள் இயக்கத்தினர் எச்சரிக்கை

விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த புஷ்பா (வயது 30), பானுமதி (25). இருவரும் சேர்ந்து திருடிய ஐந்து சவர நகையை உருக்கிய நிலையில் மீட்டு ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

click me!