சென்னையில் விடிய விடிய மழை !! இன்றும் செமமழை பெய்யுமாம் !!

By Selvanayagam PFirst Published Sep 11, 2019, 9:12 AM IST
Highlights

வெப்பச்சலனம் காரணமாக சென்னை உட்பட  தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னையில் விடிய விடிய மிதமான மழை பெய்தது. தொடர்ந்து இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் , காரைக்கால் அருகே கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி, தென்மேற்கு பருவக் காற்றின் தாக்கம் ஆகியவை காரணமாக, தமிழகத்தின் 20 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று முதல் மிதமானது வரை மழை பெய்ய  வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, சேலம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழையால் சென்னை நகரம் முழுவதும் குளிர்ச்சி நிலவி வருகிறது.

இதையனிடையே இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!