Arun IPS : சென்னை.. ரவுடிகளை ஒழிக்க அதிரடி ஆக்ஷன்.. சொன்னதை செய்யும் கமிஷனர் - வெளியான லேட்டஸ்ட் தகவல்கள்!

Ansgar R |  
Published : Jul 11, 2024, 09:34 PM IST
Arun IPS : சென்னை.. ரவுடிகளை ஒழிக்க அதிரடி ஆக்ஷன்.. சொன்னதை செய்யும் கமிஷனர் - வெளியான லேட்டஸ்ட் தகவல்கள்!

சுருக்கம்

Arun IPS : சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றார் அருண் IPS. ரவுடிகளுக்கு அவர்கள் மொழியிலேயே பதில் அளிக்கப்படும் என்றார் அவர்.

சென்னையில் கடந்த ஜூலை 5ம் தேதி மாலை, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், அவரது வீட்டின் வாசலிலேயே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று பல அரசியல் கட்சி தலைவர்களும், திராவிட முன்னேற்ற கழகத்தையும் அதன் தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களையும் சாடியது அனைவரும் அறிந்ததே. 

இந்த இக்கட்டான சூழலில், சென்னையில் அதிரடியாக சில மாற்றங்கள் நிகழ்ந்தது. அதன்படி சென்னையில் புதிய போலீஸ் கமிஷனராக திரு. அருண் ஐபிஎஸ் அவர்கள் கடந்த திங்கட்கிழமை அன்று பொறுப்பேற்றார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரவுடிகளை ஒழிக்க அவர்களுடைய மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என்றார். 

மதுரையில் சிறுவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய கொள்ளை கும்பல்; சினிமாவை மிஞ்சிய சேசிங் சம்பவம்

சென்னையை பொருத்தவரை குற்றச்செயல்கள் குறைந்து வரும் நிலையில், ரௌடிசம் மற்றும் லஞ்சத்தை ஒழிக்கவே தான் அதிக கவனம் செலுத்தப் போவதாக அருண் கூறியிருந்தார். இந்நிலையில் அதை செயல்படுத்தும் வகையில் பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாக இப்பொது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தற்பொழுது வெளியாகியுள்ள தகவலின்படி, பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும்படி தினமும் போலீசார் இரு முறை ரோந்து சுற்றிவர வேண்டும் என்று அவர் ஆணையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல் ஆணையர்கள், மற்றும் 4 இணை ஆணையர்கள் உட்பட்ட காவல்துறையின் உயர் அதிகாரிகள், போலீசார் இந்த ரோந்து பணியை சரிவர செய்கிறார்களா என்பதை அவ்வப்போது நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும்.

அதேபோல தங்களுடைய பணியில் சுணக்கம் காட்டும் போலீசார் யாராக இருந்தாலும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் பாரபட்சமின்றி பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கமிஷனர் அருண் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

புதுக்கோட்டையில் திருச்சி ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை! காட்டுக்குள் நடந்த அதிரடி ஆக்‌ஷன்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!