திமுக ஆட்சியில் கொலைகாரர்கள் எல்லாம் சுதந்திரமாக செயல்படுகின்றனர்; துரைமுருகன் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்

Published : Jul 11, 2024, 06:06 PM IST
திமுக ஆட்சியில் கொலைகாரர்கள் எல்லாம் சுதந்திரமாக செயல்படுகின்றனர்; துரைமுருகன் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்

சுருக்கம்

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் அனைவரும் சுதந்திரமாக நடமாடும் நிலையில், அரசை விமர்சிக்கும் நபர்களை கைது செய்வதை கண்டிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த மூன்றாண்டு விடியா திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில், ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

மதுரையில் சிறுவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய கொள்ளை கும்பல்; சினிமாவை மிஞ்சிய சேசிங் சம்பவம்

தன் கையில் இருக்கும் அதிகாரம், நிரந்தரமானது என்ற இருமாப்போடு, 'இம்' என்றால் சிறைவாசம் 'உம்' என்றால் வனவாசம்..... என்ற ரீதியில் வழக்குகள் போட்டு கைது செய்யும் அராஜகம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

“குடி அரசு” என்பதன் பொருள்; அப்போ புரியல, இப்போ தான் புரியுது - ராமதாஸ் விமர்சனம்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான திருச்சி சாட்டை துரைமுருகன் அவர்களை, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தெரிவித்த ஒரு சில கருத்துகளுக்காக பொய் வழக்கு புனைந்து இந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அவர் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று காவல்துறை கையில் வைத்திருக்கும் விடியா திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!