பிடிபட்டது சிறுத்தை..! நிம்மதி பெருமூச்சு விட்ட வாணியம்பாடி மக்கள் ..!

By thenmozhi gFirst Published Dec 28, 2018, 2:56 PM IST
Highlights

வாணியம்பாடி அருகே பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென நேற்று மக்கள் மீது சீறி பாய்ந்ததில்  5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு கூண்டு வைத்து இன்று சிறுத்தை பிடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.

பிடிபட்டது சிறுத்தை..! பெருமூச்சு விட்ட வாணியம்பாடி மக்கள் ..! 

வாணியம்பாடி அருகே பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென நேற்று மக்கள் மீது சீறி பாய்ந்ததில்  5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு கூண்டு வைத்து இன்று சிறுத்தை பிடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள்  பெருமூச்சு விட்டுள்ளனர்.

வாணியம்பாடி அடுத்த ஆம்பூர் பகுதிகளில் சிறுத்தைபுலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறிவந்தனர். நேற்று ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் பகுதியில் கன்றுகுட்டி, 2 ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியது.

இதனால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் நேற்று காலை,அப்பகுதி ஏரிக்கரை அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை  திடீரென அங்கிருந்தவர்கள் மீது பாய தொடங்கியது. இந்த காட்சியை கண்ட கூடி இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

இதில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் உடனே தகவல் தெரிவிக்கப்ட்டது. மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் திட்டம் போட்டு, அதற்கான கூண்டையும் வைத்து இன்று சிறுத்தையை கூண்டில் அடைத்தனர்.

பிடிபட்ட சிறுத்தையை கூண்டில் பார்த்த பின்பு தான் அந்த பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

click me!