நாளை காலை பிளஸ் டூ ரிசல்ட்... எப்போது? எந்தெந்த  இணைய தளங்களில் பார்க்கலாம்? இதோ முழு விவரம்

First Published May 15, 2018, 2:10 PM IST
Highlights
CBSE 12th Results 2018 to be declared tomorrow


தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

கடந்த மார்ச் 1 தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை தேர்வு நடந்த தேர்வில் மொத்தம் 6,903 பள்ளிகளைச் சேர்ந்த 8,66,934 மாணவ, மாணவியர், 40,686 தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 7,620 மாணவ, மாணவியர் எழுதினர்.

தேர்வு எழுதுவோரில் மாணவியர் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 3,176 ஆகும். இத்தேர்வில் 2 திருநங்கைகளும், வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் சிறைகளிலுள்ள 130 சிறைவாசிகளும் பங்கேற்கின்றனர். தமிழ் வழியில் பயின்று பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியரின் எண்ணிக்கை 5 லட்சத்து 32,243 எழுதினர்.

அதன்படி, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (16-ஆம்) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என்றும், 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 25-ஆம் தேதி காலை 9:31 முதல் 10 மணிக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்கள் உடனுக்குடன் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21ல் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

click me!