சென்னையை பாடாய் படுத்திய பஸ் டே … பேருந்து கூரை மேலிருந்து கொத்துக் கொத்தாக விழுந்த மாணவர்கள் ! பயணிகள் அவதி !!

By Selvanayagam PFirst Published Jun 18, 2019, 8:34 AM IST
Highlights

சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதற்கு இருக்கும் தடையை மீறி மாணவர்கள் திடீரென பட்டாசு வெடித்து பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் கூரை மீது ஏறி நின்று ஆபத்தான வகையில் பயணம் செய்யும் போது மாணவர்கள் கொத்துக் கொத்தாக கீழே விழுந்ததில் அவர்கள் காயமடைந்தனர்.

சென்னையில் பஸ் டே கொண்டாடுவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.ஆனால் நேற்று கல்லூரி தொடங்கியதையொட்டி தடையையும் மீறி மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பட்டாபிராம் முதல் அண்ணா சதுக்கம் வரை செல்லும் பேருந்தில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து 20 மாணவர்கள் ஏறி வந்துள்ளனர். பேருந்து பாரதி சாலை அருகே வந்த போது எதிர் திசையில் கையில் மாலையுடன் வந்த மாணவர்கள் அரசுப் பேருந்திற்கு மாலை அணிவித்து பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதோடு பேருந்தின் மீது ஏறியும் மாணவர்கள் சிலர் கத்தி கோஷமிட்டனர். அரசுப் பேருந்திற்கு போடுவதற்காக கொண்டு வந்த மாலையை ஊர்வலமாக எடுத்து வந்து வாகனத்தில் போட்டதோடு, பட்டாசுகள் வெடித்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் இந்த பஸ் டே கொண்டாட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
47 ஏ பேருந்து மீது 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறிக் கொண்டு ஆட்டம் போட்டபடி கூச்சலிடடவாறு வந்தனர். அப்போது பேருந்து முன் இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவர் திடீரென பிரேக் போட்டதால் அவர்கள் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநரும் பிரேக் அடித்தார். 

இதில் பேருந்து மேற்கூரையின் மீது இருந்த மாணவர்கள் கொத்துக் கொத்தாக மேலிருந்து கீழே விழுந்தனர். இதில் மாணவர்களுக்கு சிறு சிறு  காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து விரட்டி விட்டனர்.

27 ஹெச் பேருந்திற்கு மாலை போட்டு பேனர் கட்டி தடையை மீறி மாணவர்கள் நடத்தி பஸ் டே கொண்டாட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேருந்தின் மீது ஏறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அனுப்பினர். 

எனினும் பாரதி சாலையில் இருந்து கண்ணகி சிலை நோக்கி வந்த மாணவர்கள் கத்தி ஆரவாரம் செய்தபடியே ஊர்வலமாக கல்லூரிக்கு சென்றனர். இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

click me!