பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து – 60 பேர் படுகாயம்

By manimegalai aFirst Published Nov 4, 2018, 6:48 PM IST
Highlights

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, எதிரே வேகமாக வந்த பைக்கிற்கு வழிவிட முயன்றபோது, அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 60க்கு மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, எதிரே வேகமாக வந்த பைக்கிற்கு வழிவிட முயன்றபோது, அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 60க்கு மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் தாளூரில் இருந்து கோவைக்கு அரசு பஸ் புறப்பட்டது. இதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 60க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

நாடுகாணி செக் டேம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த சாலையில் உள்ள வளைவில் திரும்ப முயன்றபோது, எதிரே வேகமாக வந்த ஒரு பைக், மோதுவதுபோல் நெருங்கியது.

இதனை எதிர்பார்க்காத டிரைவர், பைக் மீது மோதாமல் இருக்க டிரைவர், இடதுபக்கம் திருப்பினார். இதில், நிலைதடுமாறி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் இருந்த சுமார் 10அடி பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இதில், பயணம் செய்த பயணிகள் படுகாயமடைந்து அலறி கூச்சலிட்டனர். பைக்கில் வந்த வாலிபரும், காயமடைந்தார்.

‘பொதுமக்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

click me!