தேர்தல் வந்தால் பிரதமர் மோடி இப்படித்தான் பேசுவார்: அன்றே கணித்த சு.வெங்கடேசன் எம்.பி.!

By Manikanda Prabu  |  First Published Apr 29, 2024, 10:44 AM IST

தேர்தல் வந்தால் பிரதமர் மோடியும், பாஜகவும் இப்படித்தான் பேசுவார்கள் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகளுக்கு நாடு தயாராகி வருகிறது. இதற்கான தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடி தொடங்கி பாஜகவின் கீழ்மட்ட தலைவர்கள் வரைஒ அனைவரும் மத வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அந்த வகையில், கர்நாடகா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஔரங்கசீப்பை புகழ்பவர்களுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைப்பதாக பேசினார். இந்த நிலையில், தேர்தல் வந்தால் பிரதமர் மோடியும், பாஜகவும் இப்படித்தான் பேசுவார்கள் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Tap to resize

Latest Videos

நாடாளுமன்றத்தின் கடைசி அமர்வில் நடைபெற்ற வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “சில உயிர்கள் ஒளிக்கு அஞ்சி இருளிலே வாழும், சில மனிதர்கள் நிகழ்காலத்திற்கு அஞ்சி கடந்த காலத்திலே வாழ்வார்கள். அதேபோலத்தான் சில கட்சிகளும். தேர்தல் வந்துவிட்டால் நாங்கள் எல்லாம் வளர்ச்சியைப் பற்றி, வேலையின்மை பற்றி, வறுமையைப் பற்றி  பேசினால் அவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படையெடுப்பைப் பற்றிப் பேசுவார்கள். 600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆக்கிரமிப்பைப் பற்றிப் பேசுவார்கள்.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை: உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு!

நாங்கள் பணவீக்கத்தைப் பற்றிப் பேசினால், அவர்கள் பாபரைப் பற்றிப் பேசுவார்கள். நாங்கள் கார்ப்பரேட்டுகளைப் பற்றிப் பேசினால், அவர்கள் கஜினி முகமதைப் பற்றிப் பேசுவார்கள். கடந்த காலத்தைக் கழித்து விட்டால், அவர்களிடம் எதிர்காலத்தைச் சந்திக்கிற எந்த ஒரு கருவியும் இல்லை. 2024 இந்தியாவின் வளர்ச்சி, உலக வளர்ச்சியைப் பற்றிப் பேசச் சொன்னால் இந்த தேர்தல் யுத்தத்தை துவங்கும்பொழுது பத்து ஆண்டுகள் பின்னால் போய் நின்று கொண்டிருப்பது இந்த அரசினுடைய தோல்வியின் இன்னொரு அடையாளம்.” என்றார்.

 

கர்நாடகா தேர்தல் பரப்புரையில் ஒளரங்கசீப்பைப் பற்றி மோடி பேசியுள்ளார்.

இவர்கள் இப்படித்தான் பேசி பிரச்சனைகளை திசைதிருப்புவார்கள் என்று
நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடரில் நான் பேசியது இது.

மாமதுரை வெல்லும் !
இந்தியா வெல்லும் ! pic.twitter.com/vvE3sBZYg1

— Su Venkatesan MP (@SuVe4Madurai)

 

சு.வெங்கடேசனின் இந்த பேச்சை மெய்ப்பிக்கும் வகையில், வளர்ச்சி அரசியல் குறித்து பேசாமால், கடந்த கால விஷயங்களை பற்றி பாஜகவினரும், பிரதமர் மோடியும் பேசி வருகின்றனர். இதுகுறித்து தான் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள சு.வெங்கடேசன் எம்.பி. “கர்நாடகா தேர்தல் பரப்புரையில் ஒளரங்கசீப்பைப் பற்றி மோடி பேசியுள்ளார். இவர்கள் இப்படித்தான் பேசி பிரச்சனைகளை திசைதிருப்புவார்கள் என்று நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடரில் நான் பேசியது இது. மாமதுரை வெல்லும்! இந்தியா வெல்லும்!” என பதிவிட்டுள்ளார்.

click me!