நான் மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் ஆகியுள்ளேன். உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பிசிசிஐ செயலாளர் ஆனார்? உங்கள் மகன் எத்தனை மேட்ச் விளையாடி இருக்கிறார் எவ்வளவு ரன் அடித்திருக்கிறார்? என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

04:06 PM (IST) Jul 29
என்எல்சிக்கு எதிராக போராடிய பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
03:00 PM (IST) Jul 29
திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்ததால் தற்போது இளமையாக உணர்கிறேன். எனக்கு 70 வயது ஆனாலும் தற்போது 20 வயதைப் போல் உணர்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
02:32 PM (IST) Jul 29
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது அரசு. அதன்படி, அகவிலைப்படி உயர உள்ளது. இதன் முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
01:20 PM (IST) Jul 29
கடலூர் தேசிய நெடுஞ்சாலையோர தடுப்பு சுவரில் மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
01:16 PM (IST) Jul 29
எக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் தற்போது புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
12:32 PM (IST) Jul 29
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் குறித்த 'Dr. APJ Abdulkalam Memories never Die' என்ற நூலை உள்துறை அமைச்சர்
அமித்ஷா வெளியிட்டார்.
12:30 PM (IST) Jul 29
மத்திய நிதி அமைச்சர் கார்ப்பரேட் பாண்ட் ரெப்போ ரேட் தளத்தை தொடங்கி வைத்தார். இது மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பெரிய படியாகும்.
12:08 PM (IST) Jul 29
தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும், பாஜகவின் சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
11:26 AM (IST) Jul 29
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு குழுவை சேர்ந்த 20 எம்பிக்கள் இன்று மணிப்பூர் செல்கின்றனர். இக்குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
09:44 AM (IST) Jul 29
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறாக பேசியதாக பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அவரை சென்னையில் கைது செய்து, 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
09:29 AM (IST) Jul 29
08:43 AM (IST) Jul 29
பாமக தோழர்கள் மீது தமிழ்நாடு காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியதும் தண்ணீர் பீய்ச்சி அடித்ததும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என வேல்முருகன் கூறியுள்ளார்.
08:10 AM (IST) Jul 29
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
07:55 AM (IST) Jul 29
500 நோட்டு குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் உடனடியாக சரிபார்க்க வேண்டிய நேரம் இதுவாகும்.
07:22 AM (IST) Jul 29
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அமித்ஷா வருகையை முன்னிட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
07:18 AM (IST) Jul 29
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர் பகுதியில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
07:17 AM (IST) Jul 29
நெய்வேலி என்எல்சி நெற்பயிர்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு அழித்து கால்வாய் தோண்டும் பணியை பார்க்கும்போது அழுகை வந்தது என நீதிபதி தண்டபாணி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
07:15 AM (IST) Jul 29
சென்னை கொரட்டூர் பகுதியில் காவல்நிலையம் அருகே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நில அதிர்வு உணரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
07:15 AM (IST) Jul 29
சென்னையில் 434வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.