Tamil News Highlights வரும் 29ம் தேதி பக்ரித் பண்டிகையை முன்னிட்டு, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

10:44 PM (IST) Jun 27
கோவையைச் சேர்ந்தவர் பெண் டிரைவர் சர்மிளா. இவர் தனியார் பஸ்சை இயக்கி வந்தார். பெண் டிரைவரை பல்வேறு தரப்பினரும் வாழ்த்தி வந்தனர். கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
10:12 PM (IST) Jun 27
டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ்,டெலிகிராமில் இன்ஸ்டாகிராமில் உள்ளது போல ஸ்டோரி அம்சம் விரைவில் வர உள்ளது என்று கூறினார்.
09:03 PM (IST) Jun 27
காஷ்மீர் முதல் கேரளா வரையிலான சூழ்நிலையில் காலனித்துவ காலத்து தேசத்துரோகச் சட்டத்தைத் தக்கவைக்க வேண்டும் என்று சட்டக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
08:25 PM (IST) Jun 27
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
07:18 PM (IST) Jun 27
07:01 PM (IST) Jun 27
வனப்பகுதியில் பறக்கும்போது இடி, மின்னலுடன் மழை பெய்ததால் செவோக் விமான தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்கியது. அப்போது மம்தாவுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
நடுவானில் தள்ளாடி அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம்!
07:01 PM (IST) Jun 27
வனப்பகுதியில் பறக்கும்போது இடி, மின்னலுடன் மழை பெய்ததால் செவோக் விமான தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்கியது. அப்போது மம்தாவுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
நடுவானில் தள்ளாடி அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம்!
06:53 PM (IST) Jun 27
பிரதமர் மோடி பாஸ்மாண்டா முஸ்லிம்களிடையே பேசிய பேச்சு, இந்திய அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகளிடையே கலக்கத்தை உண்டாக்கி உள்ளது.
05:53 PM (IST) Jun 27
பசு பாதுகாப்பு இயக்கம் என்பது ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் நடத்திய போராட்டம் என்பது உங்களுக்கு தெரியுமா?
05:06 PM (IST) Jun 27
ஆர்பிஐ என்று அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி 66 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
04:09 PM (IST) Jun 27
ஓப்போ ரெனோ 10 (Oppo Reno 10) விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதன் பல்வேறு அம்சங்களை பார்க்கலாம்.
03:57 PM (IST) Jun 27
7ஆம் அறிவு திரைப்படத்தில் இடம்பெற்ற இட ஒதுக்கீடுக்கு எதிரான வசனத்தை நீக்க மறுத்தது குறித்து உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
03:36 PM (IST) Jun 27
03:12 PM (IST) Jun 27
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அசின், அவரது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
03:05 PM (IST) Jun 27
அம்மாவின் பெயரால் உருவான அம்மா உணவகத்தைத் தொடர்ந்து திறம்பட நடத்தி ஏழை, எளியவர்களின் பசிப் பிணியை போக்கினோம். அம்மா உணவகங்களை மூடக்கூடாது என்று நான் சட்டமன்றத்தில் பேசியபோது, இந்த விடியா திமுக அரசு கண்டிப்பாக மூடமாட்டோம் என்று கூறியது என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
02:47 PM (IST) Jun 27
12:42 PM (IST) Jun 27
அமைச்சர் செந்தில் பாலாஜியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம்.
12:39 PM (IST) Jun 27
கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
12:39 PM (IST) Jun 27
நெல்லையில் மதபோதகர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுக எம்.பி. ஞானதிரவியம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10:58 AM (IST) Jun 27
மாமன்னன் பட நடிகை கீர்த்தி சுரேஷ், அரசியலில் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
09:22 AM (IST) Jun 27
09:04 AM (IST) Jun 27
கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்பாடு குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நெல்லை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஞானத்திரவியத்துக்கு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
08:48 AM (IST) Jun 27
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசனில் டைட்டில் வின்னர் ஆன அருணா, சாதி குறித்த கேள்விகளால் தான் மனமுடைந்து போனதாக தெரிவித்துள்ளார்.
08:11 AM (IST) Jun 27
திமுக அமைச்சரின் மருமகன் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
08:10 AM (IST) Jun 27
சொந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே அரசுக்கு எதிராக பேசியிருப்பது திமுகவினர் வெட்கப்பட வேண்டிய அவமானகரமான நிலை என நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.
07:03 AM (IST) Jun 27
சென்னையில் 402வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.