Tamil News Highlights அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் டுவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில் அவருக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

10:36 PM (IST) Jun 26
மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர் ஆன கியா இந்தியா, அதன் மாடல் கேரன்ஸின் 30,000க்கும் மேற்பட்ட யூனிட்களை திரும்பப் பெற்றுள்ளது.
10:00 PM (IST) Jun 26
தமிழகம் முழுவதும் சமூகத்தில் செல்வாக்கு மிக்க 5 குடும்பங்ளை சந்தித்துப் பேச வேண்டும் என்று தமிழக பாஜக கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
09:48 PM (IST) Jun 26
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, ஜூன் 16 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துக்கள் 2.578 பில்லியன் டாலர் அதிகரித்து 527.651 பில்லியன் டாலராக உள்ளது.
08:24 PM (IST) Jun 26
நத்திங் 2 போனின் ஆர்டர் முன்கூட்டியே ஜூன் 29 முதல் தொடங்குகிறது.அதன் முழு விபரங்களை இங்கு காணலாம்.
07:33 PM (IST) Jun 26
திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சி நடந்துவருகிறது. இந்தியாவில் அனைத்திலும் நம்பர் ஒன் தமிழ்நாடு என்று பேசும் அளவுக்கு வளர்ந்துவருகிறது என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
07:06 PM (IST) Jun 26
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
05:56 PM (IST) Jun 26
2.5 வயது குழந்தைக்கு நாக்கு அறுவை சிகிச்சைக்கு பதிலாக டாக்டர்கள் மாற்றி விருத்தசேதனம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
05:08 PM (IST) Jun 26
இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள பாகிபுல் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
04:44 PM (IST) Jun 26
ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் அர்ச்சகர் ஆகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.
04:23 PM (IST) Jun 26
வாட்ஸ்அப் செயலியில் விரைவில் அசத்தலான அம்சம் ஒன்று வரவுள்ளது.
03:08 PM (IST) Jun 26
பிரதமர் மோடியிடம் சப்ரினா சித்திக் என்ற பெண் பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டதுக்கு பிறகு அவரை சிலர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
02:16 PM (IST) Jun 26
சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தின் சூப்பரான அப்டேட் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.
01:02 PM (IST) Jun 26
கேரளாவில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் செய்த லைப் டைம் வசூல் சாதனையை போர் தொழில் திரைப்படம் முறியடித்து கெத்து காட்டி உள்ளது.
12:40 PM (IST) Jun 26
அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்ட கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் ஒன்றை பரிசளித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
12:04 PM (IST) Jun 26
11:43 AM (IST) Jun 26
நடிகை சுனைனா, இயக்குனர் டோமின் டி சில்வா, திரைப்படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் நாயர் ஆகியோர் மதுரையில் ரசிகர்களுடன் அமர்ந்து ரெஜினா படத்தை பார்த்து ரசித்தனர்.
10:08 AM (IST) Jun 26
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
09:54 AM (IST) Jun 26
ஆளுநரின் வேலையே ராஜ்பவன் மாளிகையை சுத்தமாக வைத்துக் கொள்வது தான் அதை மட்டும் அவர் பார்த்துக்கொண்டால் போதும் என திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
08:59 AM (IST) Jun 26
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிருத்விராஜ், விளையாத் புத்தா படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.
08:20 AM (IST) Jun 26
அஜித்தின் வேதாளம் உள்பட 50-க்கும் மேற்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் வில்லனாக மிரட்டிய நடிகர் கபீர் துஹான் சிங்கிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
07:55 AM (IST) Jun 26
சென்னையில் 401வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
07:53 AM (IST) Jun 26
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை விட்டுவிட்டு, மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி வலியுறுத்தி உள்ளார்.
07:52 AM (IST) Jun 26
பொறியியல் படிப்புக்களில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது. சிறப்புப் பிரிவினருக்கு ஜூலை 2, பொதுப் பிரிவினருக்கு ஜூலை 7ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.
07:08 AM (IST) Jun 26
அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கான அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.