அடுத்த 3 மணி நேரத்திற்கு காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

04:05 PM (IST) Jul 23
ஆந்திர மாநிலத்தில் சூர்யாவின் பிறந்தநாளுக்காக பேனர் வைக்க சென்ற இரண்டு ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
03:56 PM (IST) Jul 23
கோவையை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொண்டு 2 தங்கப்பதக்கங்கள் மற்றும் ரூ.2 லட்சம் பரிசுத்தொகையைனை தட்டிச்சென்றுள்ளார்.
01:58 PM (IST) Jul 23
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு கோமாவில் உள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் அமைச்சர் ப.சிதம்பரம் காட்டமாக விமர்சித்துள்ளார்.
01:49 PM (IST) Jul 23
புதிய பைக் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. குறைந்த விலையில் ஹீரோ பைக்கை வீட்டிற்கு கொண்டு வரலாம். எப்படியென்று இங்கு பார்க்கலாம்.
01:21 PM (IST) Jul 23
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பற்றி முழுமையான விவரங்களை இங்கு பார்க்கலாம்.
01:10 PM (IST) Jul 23
மணிப்பூர் கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி விவாதிக்க தயாராக இல்லை என்பதுதான் ஜனநாயகத்தில் நடந்த மிகப்பெரிய கொடுமை என கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார்
01:09 PM (IST) Jul 23
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் ஜூலை 29ஆம் தேதி நடைபெறவுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்
01:09 PM (IST) Jul 23
சீன ஆளில்லா விமானங்கள் மூலம் பஞ்சாபில் போதைப் பொருட்கள், ஆயுதங்களை பாகிஸ்தான் வீசுவது தெரியவந்துள்ளது
01:09 PM (IST) Jul 23
பிரதமர் வீடு திட்டத்துக்கு போட்டியாக கிராமப்புற மக்களுக்காக ஒரு புதிய வீட்டு திட்டத்தை சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது
01:08 PM (IST) Jul 23
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது
12:48 PM (IST) Jul 23
12:15 PM (IST) Jul 23
விரைவு ரயில் சேவையில் இன்று பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் பற்றிய முழுமையான விவரங்களை இங்கு காணலாம்.
11:30 AM (IST) Jul 23
ரிலையன்ஸ் ஜியோவின் சூப்பரான சலுகை மூலம் முழு குடும்பமும் இலவச அன்லிமிடெட் அழைப்பு, டேட்டா மற்றும் பலவற்றைப் பெறும் திட்டத்தை பற்றி பார்க்கலாம்.
11:02 AM (IST) Jul 23
7.35 லட்சம் விலையில் மின்சார சன்ரூஃப் கொண்ட இந்தியாவின் மிகவும் மலிவு விலை காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
10:34 AM (IST) Jul 23
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இருந்து வெளிவரும் மற்றொரு அதிர்ச்சியான சம்பவத்தில், ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி ஆயுதமேந்திய கும்பலால் அவரது வீட்டிற்குள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
10:02 AM (IST) Jul 23
மணிப்பூரைச் சேர்ந்த வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சிகள் பெறலாம் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்
09:35 AM (IST) Jul 23
மணிப்பூர் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள முன்னாள் எம்.பி. கண்ணன் பாஜகவிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் தொடர்பும் அறவே இல்லை என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
09:28 AM (IST) Jul 23
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
08:54 AM (IST) Jul 23
நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் பாஸ்வேர்ட்களைப் பகிர்வதில் கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது.
07:56 AM (IST) Jul 23
வாக்குறுதி அளித்ததைக் காட்டிலும் உதவித்தொகையை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
07:09 AM (IST) Jul 23
நெல்லையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.
07:09 AM (IST) Jul 23
சென்னையில் 428வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.