
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த உமா கார்த்திகேயன், umagarghi26 என்ற பெயரில் ட்விட்டரில் பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வந்தார். இந்த சூழலில் திமுக குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்தும் அவதூறு பரப்பியதாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஹரிஷ் அளித்த புகாரின் பேரில் உமா கார்த்திகேயன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கபப்ட்டுள்ள நிலையில், கடந்த 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர்.
25% மறைமுக மின் கட்டண உயர்வா? எது நடக்கக்கூடாது நினைச்சேனோ அது நடக்க போகுது! அலறும் ராமதாஸ்..!
இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டதாக, விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்னை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் உள்ள உமா கார்த்திகேயன் சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் விசாரிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே பிரதமராகும் தகுதி உள்ளது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ