பாஜக கொடுத்த தைரியம் தான் விஜய் வீடியோவில் முதலமைச்சரை மிரட்டுகிறார்..! கொதிக்கும் விசிக வன்னியரசு!

Published : Oct 01, 2025, 12:33 PM IST
Vanni Arasu

சுருக்கம்

கரூரில் தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, விஜய் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மீது பழி சுமத்திய விஜய்யின் இந்த திடீர் துணிச்சலுக்கு, பாஜக விசாரணை குழுவின் வருகையே காரணம் என வன்னி அரசு விமர்சித்துள்ளார்.

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கரூர் விரைந்தனர். ஆனால், விஜய் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காமல் தனி விமானம் மூலம் சென்னை வந்துவிட்டார். இது பெரும் பேசும் பொருளாகியது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிற அனைவரும் விரைவில் குணமாகி வர வேண்டும். கூடிய சீக்கிரமே உங்கள் எல்லோரையும் நான் சந்திக்கிறேன். இந்த நேரத்தில் எங்களுடைய நிலையை புரிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவாக பேசிய அரசியல் கட்சிகளை சார்ந்த நண்பர்கள், தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சி.எம்.சார் உங்களுக்கு ஏதாவது பழி வாங்கும் எண்ணம் இருந்தால் என்னை எதுவேண்டுமானாலும் செய்யுங்கள். அவர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் வீட்டிலோ, ஆபிசிலோதான் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்றார். இந்நிலையில் பாஜக குழுவின் விசாரணை அறிக்கையும் இந்த கோணத்தில் தான் வரப்போகிறது என்பதை விஜய் பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பாக வெளிப்படுத்தியருக்கிறார் என வன்னி அரசு விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் தள பக்கத்தில்: ஒரு வழியாக 4 வது நாளான இன்று மவுனம் கலைத்துள்ளார் நடிகரும் தவெக தலைவருமான விஜய் அவர்கள். அதாவது 27ம் தேதியன்று இரவு கும்பலை கூட்டியதில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒப்பாரியும் ஓலமும் கதறலும் கேட்டுக்கொண்டே இருக்கும் போது, அவசரம் அவசரமாக கண்களையும் காதுகளையும் மூடியவாறே சென்னை ஓடினார்.

பாஜக சார்பில் விசாரணை குழு அறிவிக்கப்பட்டது. நடிகை ஹேமமாலினி தலைமையிலான குழு கரூர் வந்திறங்கியதும் நடிகர் விஜய் வீடியோவில் ‘துணிச்சலாக’ பேச ஆரம்பித்து விட்டார். ஏனென்றால், ஹேமமாலினி உபி கும்பமேளாவில் 82 பேர் மரணித்த சம்பவத்தை ஆதரித்தும் ஞாயப்படைத்தியும் பேசினார். இதே குழுவில் உள்ள முன்னாள் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தான் டெல்லி குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தின் போது, “தேச விரோதிகளை சுட்டுக் கொல்வோம்”என்று முஸ்லீம்களுக்கு எதிராக பொதுக் கூட்டத்தில் வெறுப்பை கக்கினார். இன்னொரு உறுப்பினரான மாநிலங்களவை உறுப்பினர் ரேகா சர்மா தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர்.

மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக விரட்டப்பட்டபோதும் கொல்லப்பட்ட போதும் வாய் திறக்காமல் வன்முறைக்கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டார். இப்போது நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் திமுக அரசுக்கு எதிராகவும் அறிக்கை தர களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த துணிச்சலில் தான் விஜய் வீடியோவில் தமிழ்நாடு முதல்வரை எச்சரித்துள்ளார். பாஜக குழுவின் விசாரணை அறிக்கையும் இந்த கோணத்தில் தான் வரப்போகிறது என்பதை விஜய் பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பாக வெளிப்படுத்தியருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!