
அண்மையில் கட்சி தொடங்கிய விஜய் ஆரம்பம் முதலே திமுக மற்றும் பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் அண்மை காலமாக பாஜக அரசை மறந்துவிட்டு தனது முழு டார்கெட்டையும் திமுக அரசுக்கு எதிரானதாக மாற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார். ஆனால் விஜய் தொடர்பாக திமுக முக்கிய தலைவர்கள் அதிகமாக வாய்த் திறக்காமல் இருந்து வந்தனர்.
ஆனால் அண்மையில் கரூர் மாவட்டத்தில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 தொண்டர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி தலைவர்கள் விஜய்க்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகளை வீசி வருகின்றனர்.
இதனிடையே விஜய் வெளியிட்ட தன்னிலை விளக்க வீடியோவில், “நடக்கக்கூடாத சம்பவம் நடந்துவிட்டது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று பேசிவிட்டு வந்தோம். அதைத்தவிற வேறு எந்த தவறையும் நாங்கள் செய்யவில்லை. இதற்கு முன்பாக 5 மாவட்டங்களில் நாங்கள் பிரசாரம் செய்துள்ளோம். அங்கெல்லாம் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கரூரில் மட்டும் அசம்பாவிதம் நடைபெற்றது எப்படி? சிஎம் சார் உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டுமா? என்று முதல்வரை நேரடியாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் திராவிடர் கழக துணைப்பொதுச் செயலாளரும், வழக்கறிஞருமான அருண்மொழி விஜய்யை கடுமையாக சாடி உள்ளார். தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கற்ற அருண்மொழி, “கொடூர குணம் கொண்ட மனிதரிடம் லட்சக்கணக்கான குழந்தைள் மாட்டிக் கொண்டுள்ளனர்.
எப்படி புளூ வேல் என்ற ஆபத்தான கேமில் குழந்தைகள் சிக்கினார்களோ, அப்படி ஒரு ஆபத்தான மனிதரிடம் சிக்கி உள்ளனர். அந்த கேமை இயக்குபவர்கள் யார் என்ற தெரியாது, மக்கள் மது அக்கறை உள்ளவர்களுக்கு அதை இயக்குபாவர்கள் மீது எப்படி பயம் வருமோ அது மாதிரியான அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது. விஜய்யின் வீடியோவுக்கு யாரோ வசனம் எழுதி கொடுத்திருக்கார்கள். தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றும் முயற்சியில் விஜய்யை யாரோ இயக்குகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.