சென்னை கட்டிட விபத்துக்கும் பிரதமர் இரங்கல்..! தமிழக விஷயங்களுக்கு நேரடி கவனம்

Published : Oct 01, 2025, 08:42 AM IST
PM Modi

சுருக்கம்

சென்னை அருகே எண்ணூரில் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் அசாமைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி.

சென்னை அருகே எண்ணூரில் நடந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் அசாமைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப்பணியில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் சிவசங்கர் மற்றும் TANGEDCO தலைவர் ராதாகிருஷ்ணனை நேரடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். மேலும், உயிரிழந்தோரின் உடல்களை அசாமுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

எண்ணூர் அனல் மின் நிலையத்தின் புதிய அலகு கட்டுமானத்தில் 45 அடி உயரத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. அப்போது, ​​திடீரென சாரம் இடிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளர்கள் கீழே விழுந்தனர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்த நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய அசாமைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது ஊருக்கு கொண்டு செல்லப்படும் வகையில் தமிழ்நாடு சொந்த அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கிறோம்” என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் ஏற்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்த துயரச் சம்பவம் என்னை மிகுந்த வருத்தமடையச் செய்தது. 

இந்த கடினமான வேளையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் என் ஆழ்ந்த அனுதாபங்களும் எண்ணங்களும் இணைந்துள்ளன.காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டி நான் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் நிவாரணமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!