
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் யுதிஸ்வரன் (34). இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதீஸ்வரி (30). மீனம்பாக்கத்தில் உள்ள சிஜிஎச் மத்திய அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. 3 மாதங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததனர்.
பிரிந்து வாழ்ந்தாலும் அவ்வப்போது இருவரும் சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி விடுமுறை என்பதால், சென்னை அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனது சகோதரி முத்துலட்சுமியை பார்க்க ஜோதீஸ்வரி சென்றுள்ளார்.
அன்று மாலை வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு ஜோதீஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பின் 12வது தளத்திற்கு சென்றுள்ளார். பின்னர் 12வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பீர்க்கன்காரணை காவல்துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜோதீஸ்வரியின் சடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜோதீஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியது கணவர் யுதிஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.