மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தமிழகத்தில் என்டிஏ கிட்டத்தட்ட 15 இடங்களை வீணடித்துள்ளது.
மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. இன்னும் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், என்டிஏ கிட்டத்தட்ட 10 முதல் 15 இடங்களை அதிமுக மற்றும் பாஜக வீணடித்துள்ளன.
கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, விருதுநகர், கோவை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, ஆரணி, தருமபுரி, தென்காசி, விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இடங்களில் திமுக-வை விட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளின் வாக்குகள் அதிகம். இதே போன்று தென் சென்னையில் திமுக, பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டணிக்கு வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாக உள்ளது. எனினும், இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இது கண்டிப்பாக மாறும். ஆனால், இவ்வளவு நெருக்கமான தேர்தலில் என்டிஏ 10-15 இடங்களை வெல்லும் வாய்ப்பை பாஜக கோட்டைவிட்டுள்ளது.
undefined
இதற்கு முக்கிய காரணம், அதிமுக உடனான கூட்டணியை பாஜக புறக்கணித்தது தான் என்று சொல்லப்படுகிறது. இந்த மக்களை தேர்தலில் தமிழகத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுள்ள அதிமுக உடனான கூட்டணிக்கு பாஜக சம்மந்தம் சொல்லியிருந்தால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றி வாகை சூடியிருக்கும். ஆனால், தற்போது மாலை 4 மணி நிலவரப்படி திமுக 40 தொகுதியிலும் முன்னிலை பெற்று வருகிறது. ஏற்கனவே சென்னை அண்ணா அறிவாலத்தில் திமுகவின் வெற்றியை தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Coimbatore Constituency: சொல்லி அடித்த திமுக; கோவையில் 500 பேருக்கு ஆடு பிரியாணி வழங்கி கொண்டாட்டம்
பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என கருத்து கணிப்பு வெளியானது. இந்தியா கூட்டணி 150 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் எனவும் கருத்துக்கணிப்புகள் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அந்த கருத்து கணிப்புகளை பொய்யாக்கி இந்தியா கூட்டணி 230 தொகுதிகளில் வரை முன்னிலை பெற்று வருகிறது. கடந்த இரண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் தவித்த காங்கிரஸ் கட்சி தற்போது தனித்து 100 தொகுதி வரை முன்னிலை பெற்றுள்ளது.