புதுசா கிளம்பிய புயல்.. சென்னையில் இடியுடன் பெய்ய போகும் மழை!!

By Kalai Selvi  |  First Published Jun 4, 2024, 4:33 PM IST

இன்று மாலை சென்னையின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார். 


தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டிய நிலையில், சமீப காலமாக அவ்வப்போது மழை பெய்து மண்ணை குளிர்விக்கிறது. இந்த நிலையில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார். 

அதுவும் இது வெறும் கோடை மழை இல்லை என்பது அவருடைய ட்வீட் மூலம் தெரியவருகிறது. அவர் ட்வீட்டில் கூறியுள்ளதாவது:"இதுவரை கடலோரத்தில் இருந்து புயல்கள் கிளம்புவதையே நாம் பார்த்திருக்கிறோம்.  ஆனால் தற்போது ஆந்திராவில் உள்ள நகரி மலையில் இருந்து புயல்கள் உருவாகி வருகின்றன"எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

இந்த புயல் காரணமாக இன்று (ஜூன்.4) மாலை அல்லது இரவில் சென்னையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த புயலின் காரணமாக சென்னை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கும் வாய்ப்புள்ளது.

click me!