Latest Videos

Loksabha Election Results 2024 : தர்மபுரி.. பின்னடைவை சந்தித்த சவுமியா.. வெற்றி வாகை சூடிய திமுக - முழு விவரம்

By Ansgar RFirst Published Jun 4, 2024, 4:41 PM IST
Highlights

Sowmiya Anbumani : தர்மபுரியில் போட்டியிட்ட மதிமுகவின் சவுமியா அன்புமணி காலை முதல் முன்னனிலயில் இருந்த நிலையில், இப்பொது அவர் தோல்வியடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு என்னும் பணி இன்று ஜூன் மாதம் நான்காம் தேதி காலை முதலே பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி தொகுதியில் காலை தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடித்த பிறகு முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை துவங்கியது. அப்போது தொடர்ச்சியாக முன்னிலையில் இருந்து வந்த பாமகவின் சௌமியா அன்புமணி இறுதி கட்ட வாக்கு எண்ணிக்கையின் பொழுது பெரிய அளவில் பின்னடைவை சந்தித்தார். 

இந்த சூழ்நிலையில் தர்மபுரியில் சௌமியா அன்புமணியை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணி அவர்கள் சுமார் 13,730 வாக்குகள் முன்னிலை பெற்று தொடர்ச்சியாக முன்னணியில் இருந்து வந்த நிலையில் தற்பொழுது தர்மபுரியில் திமுக வேட்பாளர் மணி அவர்கள் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Madurai Constituency: 1.90 லட்சம் வாக்கு வித்தியாசம்; சொல்லி அடித்த எம்.பி. வெங்கடேசன் - மதுரையில் ஆரவாரம்

கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் துவங்கியது. சுமார் இரண்டு மாத காலம் நீடித்த வாக்குப்பதிவு கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதியோடு நிறைவடைந்தது இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்கு பதிவு நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானது அதில் பாஜகவின் NDA கூட்டணி இந்தியாவில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் இன்று ஜூன் மாதம் நான்காம் தேதி தற்போது வாக்குகள் என்னும் பணி நடந்துவரும் நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் திமுக மற்றும் அதனுடைய தோழமைக் கட்சிகள் 40க்கு 40 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Lok Sabha Elections 2024 Results: வார்த்தை போரால் தமிழகத்தில் 15 இடங்களை கோட்டைவிட்ட பாஜக!

click me!