அவதூறு வழக்கில் கைதான பாஜக நிர்வாகி எஸ்.ஜி. சூர்யாவுக்கு ஜாமீன்.. மதுரை நீதிமன்றம் உத்தரவு

Published : Jun 20, 2023, 07:28 PM IST
அவதூறு வழக்கில் கைதான பாஜக நிர்வாகி எஸ்.ஜி. சூர்யாவுக்கு ஜாமீன்.. மதுரை நீதிமன்றம் உத்தரவு

சுருக்கம்

தமிழக பாஜக மாநில செயலாளர், எஸ்.ஜி சூர்யாவுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அதில் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில் ‘ மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியோ, விஸ்வநாத் என்ற வார்டு உறுப்பினரோ இல்லை என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதுரை எம்.பி மீது எஸ்.ஜி. சூர்யா அவதூறு பரப்புவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

பாஜகவின் பி டீம் நான் அல்ல; என்னுடைய மறு உருவம் தான் பாஜக - சீமான் விளாசல்

இந்த புகாரின் பேரில் வழ்க்குப்பதிவு செய்த காவல்துறையினர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த எஸ்.ஜி.சூர்யாவை போலீசார் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எஸ்.ஜி சூர்யா கைது செய்யப்பட்டதை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் எஸ்.ஜி சூர்யா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையடுத்து நேற்று மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் எஸ்.ஜி. சூர்யா ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணை நீதிபதி இன்றைக்கு ஒத்தி வைத்தார். அதன்படி, இன்று எஸ்.ஜி. சூர்யாவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.ஜி. சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

தமிழ்நாடு என்றாலே செங்கோல் தான் நினைவுக்கும் வரும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை