செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு? மனித உரிமைகள் ஆணையம் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!

Published : Jun 20, 2023, 07:21 PM ISTUpdated : Jun 20, 2023, 07:30 PM IST
செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு? மனித உரிமைகள் ஆணையம் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!

சுருக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படிருக்கும் நிலையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் அமலாக்கத்துறையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. செந்தில் பாலாஜியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி முறைகேடு செய்ததாவும், அதில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாவும் கூறப்படுகிறது.

அவதூறு வழக்கில் கைதான பாஜக நிர்வாகி எஸ்.ஜி. சூர்யாவுக்கு ஜாமீன்.. மதுரை நீதிமன்றம் உத்தரவு

இது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை ஆக்‌ஷனில் இறங்கியது. இதன்படி செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூன் 13ஆம் நள்ளிரவில் செந்தில் பாலாஜியைக் கைது செய்தனர்.

கைது என்றவுடன் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் முதலில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், நீதிமன்ற அனுமதியுடன் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நாளை (புதன்கிழமை) இதயத்தில் அடைப்பை சரிசெய்வதற்கான பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

இதை செய்யாவிட்டால், தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதை கவனிச்சீங்களா?

இந்நிலையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் செந்தில் பாலாஜி கைது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தனது கணவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படாமல், அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக நடந்துகொண்டனர் என்று புகார் அளித்துள்ளார். அமலாக்கத்துறை இணை இயக்குநர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு என்றாலே செங்கோல் தான் நினைவுக்கும் வரும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை