அண்ணாமலையிடம் கேள்வி கேட்ட விசைத்தறி நெசவாளரை வேட்பாளர் இருக்கும்போதே தாக்கிய பாஜகவினர்

By Velmurugan sFirst Published Apr 8, 2024, 8:13 PM IST
Highlights

கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய விசைத்தறி நெசவாளரை அங்கு கூடியிருந்த பாஜக நிர்வாகிகள் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பாமக, அமமுக, ஓ.பன்னீர்செல்வம் அணி உள்ளிட்டோருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. அதில் பாஜகவுக்கு சற்று சாதகமாக கருதப்படும் தொகுதிகளில் ஒன்றான கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகின்றார். கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது. 

இதனை அடிப்படையாகக் கொண்டு கோவை தொகுதியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை களம் இறங்கி உள்ளார். அவரை வெற்றி பெற வைக்க பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்களும் கடந்த சில மாதங்களாகவே கோவை தொகுதியில் போட்டிப்போட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கோவையில் பல்வேறு தடைகளை கடந்து பிரதமர் மோடி பிரமாண்ட வாகன பேரணியை நிகழ்த்திக் காட்டினார்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் மக்களின் நேர விரயத்தை குறைத்தது பாஜக தான் - நீலகிரியில் நமீதா பேச்சு

இந்நிலையில், கோவை நாடாளுமன்ற தொகுதி, பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்பாளர் அண்ணாமலை நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். பள்ளிபாளையம் பகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது விசைத்தறி தொழில் குறித்து அவர் விளக்கமாக பேசிக் கொண்டு இருந்தார். 

வடலூர் வள்ளலார் ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்க கடும் எதிர்ப்பு; தீடீ போராட்டத்தால் தொடர் பதற்றம்

அப்போது கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கிறீர்கள். உங்களால் தான் எங்கள் தொழில் நலிவடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பெத்தாம்பூச்சி பாளையத்தைச் சேர்ந்த விசைத்தறி நெசவாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் அவரை பிரசார வாகனத்திற்கு பின்புறமாக அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கி அனுப்பினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

click me!