பசங்களுக்கு மட்டுமில்ல உங்களுக்கும் தான் !! ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் அட்டெண்டன்ஸ் !! கிடுக்கிப்பிடி போட்ட செங்கோட்டையன் !!

By Selvanayagam PFirst Published Jan 16, 2019, 11:31 AM IST
Highlights

பசங்களுக்கு மட்டுமில்ல உங்களுக்கும் தான் !!  ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் அட்டெண்டன்ஸ் !! கிடுக்கிப்பிடி போட்ட  செங்கோட்டையன் !!

தமிழக கல்வித்துறை அமைச்சராக செங்கோட்யைன் பொறுப்பேற்ற பிறகு அத்துறையில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி, அரசுப்பள்ளிகளில் நீட் தேர்வுப் பயிற்சி, மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு என அதிரடியாக கலக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை கொண்டு வரப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக மதுரை மாவட்டத்தில் இம்மாதம்  21 முதல் 113 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு  தொடங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து .மாநில அளவில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இம்முறை அமல்படுத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதற்கட்டமாக 261 பயோ மெட்ரிக் வருகை பதிவு கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு பள்ளிக்கு 2 வீதம் 113 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தவிர முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மதுரை, திருமங்கலம், மேலுார், உசிலம்பட்டி என நான்கு கல்வி மாவட்ட அலுவலகங்கள், 15 வட்டார கல்வி அலுவலகங்கள், 15 வட்டார வள மையங்களில் இக்கருவிகள் பொருத்தும் பணிகள் நடக்கின்றன.


ஆசிரியர்கள், அலுவலர்களின் ஆதார் எண்கள் மற்றும் எட்டு 'டிஜிட்' கோடு எண் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் அல்லது அலுவலர்கள் கருவியில் கைவிரல் ரேகையை பதிவு வைக்கும் போது 'கோடு எண்கள்' மட்டுமே ஸ்கிரீனில் தெரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளில் காலை 8:45 முதல் 9:15 மணிக்குள், பகல் 1:00 முதல் 1:15 மணிக்குள்ளும் ஆசிரியர் வருகை பதிவு செய்ய வேண்டும்.கல்வி அலுவலகங்களில் காலை 10:00 மணிக்குள் அதிகாரிகள், அலுவலர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இனி, ஆசிரியர், அலுவலர் தாமதமாக பணிக்கு வந்ததை ஏதாவது காரணத்தை கூறி சமாளிக்க முடியாது என்றார் கல்வி அதிகாரி ஒருவர்.

click me!