தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இதற்கு தடை.. வெளியான அதிரடி சரவெடி உத்தரவு..!

By vinoth kumar  |  First Published Dec 19, 2022, 7:24 AM IST

தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். 


ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவதை தடுக்க, இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை விதிக்கப்படுவதாக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில்,  திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ரேஷன் கடைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மற்றும் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும்,  குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் எடை சரியாகவும், தரமானதாகவும் வழங்கவில்லை என்றால் புகார் அளிக்க செல்போன் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த புகார் எண் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும் படி ரேஷன் கடைகளின் வெளியே ஒட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- நியாய விலைக் கடைகளை பொலிவுறச் செய்யும் திட்டம்… திடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து தமிழக அரசு விளக்கம்!!

இந்நிலையில், தமிழக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடு போகாமல் இருக்க இந்த உத்தரவு பிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவதைத் தடுக்க இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை விதிக்கப்படுவதாக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். ஒரு சில கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக தகவல் அளித்துள்ளதால் இதனைத் தடுக்கும் விதமாக பகல் நேரங்களில் மட்டுமே பொருட்கள் இறக்கப்படும். அப்போதுதான் தரமற்ற பொருட்கள் இருந்தால் அதனை உடனடியாக மாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-  குடும்ப அட்டைதாரரர்களுக்கு ஆயிரம் ரூபாய்.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் !!

click me!