தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உடலில் தேசியக் கொடி போர்த்திய நிலையில் தெரு நாய் ஒன்று சாலையில் உலா வருவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த காயிதே மில்லத் பகுதியில் உள்ள சாலைகளில் நாய் ஒன்று உடலில் தேசியக் கொடி போர்த்திய நிலையில் உலா வந்தது. அடையாளம் தெரியாத நபர்கள் செய்த இதுபோன்ற சம்பவம் மக்கள் மத்தியில் முகசுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய கீதம், தேசிய பறவை, தேசிய விலங்கு இவை அனைத்திற்கும் மேலாக தேசிய கொடி மிகவும் புனிதமாகவும், மரியாதைக்குறியதாகவும் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட தேசிய கொடியை இதுபோன்று அவமரியாதை செய்யும் நபர்கள் மீது சட்டப்படி நடபடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
எம்ஜிஆர் சிலையிடம் கடிதம் கொடுத்துவிட்டு அழுதவாறு கட்சியை விட்டு விலகிய பிரமுகர்
மேலும் துபபுறவு பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி பணியாளர்கள் நாயின் மீது கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியை அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் ஓராண்டு நடைபயணம் - அண்ணாமலை அறிவிப்பு
நாய் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்ட சம்பவம் அறிந்த பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்த சென்றனர்.